80, 90களில் பெண்களை மையப்படுத்தி எடுத்த 5 படங்கள்.. பிரகாஷ்ராஜ் மூக்கை உடைத்த கல்கி

5 Feminine Characters Movie: இன்றைய காலகட்டத்தில் ஹீரோயின்கள் தனி கதாநாயகியாக நடித்து அந்த படம் வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் 80 மற்றும் 90களின் காலகட்டத்திலேயே அப்போதைய ஹீரோயின்ஸ் இதை ரொம்பவும் அசால்டாக செய்துவிட்டனர். மிகப்பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலேயே, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிறைய படங்களும் இருக்கின்றன. அதுபோன்ற படங்களில் இந்த ஐந்து படங்கள் சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியவை.

சிந்து பைரவி: இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுகாசினி, சுலோச்சனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிந்து பைரவி. மிகப்பெரிய இசை மேதைக்கு இருக்கும் மமதை , அதை உடைக்கும் முற்போக்கு சிந்தனையுள்ள பெண், கணவனே கண்கண்ட தெய்வம் என கண்மூடித்தனமாக வாழும் மனைவி இவர்களுக்குள் நடக்கும் உறவு சிக்கலை பாலச்சந்தர் வழக்கம் போல் தன்னுடைய ஸ்டைலில் சொன்ன படம் தான் இது.

Also Read:90களில் பயமுறுத்திய 5 பேய் படங்கள்.. அப்பமே 2 படங்களில் பட்டைய கிளப்பிய தக்காளி சீனிவாசன்

கல்கி: இயக்குனர் பாலச்சந்தரின் படங்களில் முக்கியமான படம் கல்கி. கணவனின் தொல்லை தாங்காமல் திருமண உறவில் இருந்து வெளியே வரும் பெண், என்ன செய்தாலும் கணவனுடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று தைரியம் இல்லாமல் வாழும் பெண், தனக்கு எதிராக நடக்கும் விஷயங்களை ஒரு பெண் இப்படித்தான் எதிர்த்து கேட்க வேண்டும் என்பதை பாடமாக எடுத்துச் சொல்லும் ஒரு பெண் என மூன்று பேரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை இது. இந்த மூன்று பேரிடமும் சிக்கிக்கொண்டு ஆண் என்னும் அகந்தை அழியும் கணவனாக பிரகாஷ்ராஜ் இதில் நடித்திருப்பார்.

மகளிர் மட்டும்: வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறியவுடன் அவர்களுக்கு நடக்கும் இன்னல்களை ரொம்பவும் நகைச்சுவையாகவும், எதார்த்தமாகவும் எடுத்துச் சொல்ல படம் தான் மகளிர் மட்டும். இந்த படத்திற்கு கதை எழுதி தயாரித்தது உலகநாயகன் கமலஹாசன். கிரேசி மோகனின் வசனத்தில் ஒவ்வொரு காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்திருக்கும்.

Also Read:சுந்தர் சி இயக்கத்தில் பிளாக் பாஸ்டரான 6 படங்கள்.. பேய்களை டம்மி பீஸ் ஆக்கிய அரண்மனை

மனதில் உறுதி வேண்டும் : செவிலியர் பணி செய்யும் சுகாசினி திருமண உறவில் இருந்து வெளியே வந்து தன் குடும்பத்தை முன்னேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தன் பயணத்தை தொடங்குகிறாள். அதில் அவளுக்கு நடக்கும் சிக்கல், அதன் பின்னால் அவனுக்கு ஏற்படும் காதல் பின்னர் எதுவுமே வேண்டாம் என்று மருத்துவத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என அவள் எடுக்கும் முடிவு இதை மையப்படுத்தி வெளியான திரைப்படம் தான் மனதில் உறுதி வேண்டும். இதில் சுகாசினி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

விதி: காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மறைத்து விட்டு வாழ வேண்டும் என்ற பழைய விதியை தாண்டி ஏமாற்றியவனை தண்டித்தே ஆக வேண்டும் என்று சட்டத்தின் முன்னால் வந்து நிற்கும் ராதாவை பற்றிய கதைதான் இந்த விதி திரைப்படம். இதில் மோகன், பூர்ணிமா, சுஜாதா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

Also Read:ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்