கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நாசர் நடித்து அசத்திய 5 படங்கள்.. பத்ரியாய் மிரட்டிய குருதிப்புனல்

நாசர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கணக்கச்சிதமாக நடிக்க கூடியவர். ஹீரோ, வில்லன், காமெடி என எதைக் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுத்திடுவார். கமலுடன் இணைந்து நாசர் நிறைய படங்களில் நடித்துள்ளார். அதில் கமலுக்கே டஃப் கொடுக்கும் படியான 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

அவ்வை சண்முகி : கமல் பெண் வேடமிட்டு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்த அவ்வை சண்முகி படத்தில் சமையல்காரர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார். மிகவும் வெந்தியான குணமுடைய, சென்னை பாஷையில் பேசும் மனிதராக இந்த படத்தில் நாசர் அசத்து இருப்பார்.

Also Read :ஏமாற்றுகிறதா நடிகர் சங்கம்? நாசர், கார்த்திக், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தேவர் மகன் : சிவாஜி, கமல் என இரண்டு ஆளுமைகளுக்கு இணையான நடிப்பை இப்படத்தில் நாசர் கொடுத்திருந்தார். மாயாண்டி தேவர் என்ற அவரது கதாபாத்திரத்திற்கு உண்டான கம்பீரமும், துணிச்சலையும் செவ்வனையே செய்து முடித்திருந்தார் நாசர். இன்றும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குருதிப்புனல் : கமல், நாசர், அர்ஜுன் கூட்டணியில் வெளியான படம் குருதிப்புனல். இந்தப் படத்தில் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பத்ரியாக நாசர் நடிப்பில் மிரட்டி இருந்தர். குருதிப்புனல் படத்தில் கமலுக்கு இணையான நடிப்பில் நாசர் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Also Read :நாசர் சினிமாவில் வளர்த்துவிட்ட 3 பேர்.. சோடை போகாமல் அடித்து பட்டையை கிளப்பும் நடிகர்கள்

அன்பேசிவம் : சுந்தர் சி இயக்கத்தில் கமலஹாசன், மாதவன், கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். இந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தை கந்தசாமி என்ற கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தார். தனது பெண்ணுக்கு நல்ல வாழ்வை தர எதையும் செய்யத் துணியும் நபராக நாசர் இப்படத்தில் நடித்திருந்தார்.

நாயகன் : மணிரத்னம் இயக்கத்தில் அற்புதமான படைப்பாக வெளியானது நாயகன். கமல்ஹாசன், சரண்யா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்தில் நாசர் பட்டேல் என்ற கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் நாசரின் திரை வாழ்க்கை முக்கியமான படமாக அமைந்தது.

Also Read :வெறித்தனமாய் நாசர் மிரட்டிய 6 படங்கள்.. கமலுக்கு தண்ணிகாட்டிய தேவர்மகன் மாயனை மறக்க முடியுமா!

- Advertisement -