காமெடி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. சந்தானத்தின் காதலியாக மாஸ் காட்டிய ஜாங்கிரி

திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரம் என்றால் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள்தான் முதலில் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவார்கள். ஆனால் காமெடி கதாபாத்திரங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நடிகைகளும் தற்பொழுது காமெடி கேரக்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படியாக சமீபத்தில் தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வரும் 5 நடிகைகளை இங்கு காணலாம்.

தேவதர்ஷினி: தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் தேவதர்ஷினி. அதிலும் தனது நக்கல் கலந்த பேச்சின் மூலம் அசால்ட் காட்டும் காமெடி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் காமெடியில் தெறிக்க விட்டிருப்பார்.

Also Read: தேவதர்ஷினியை நடிகையாக மட்டும்தான தெரியும்.. ஆனா வேற ஒரு துறையில் பெரிய கில்லி தெரியுமா

தீபா ஷங்கர்: குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தீபா சங்கர். அதிலும் தனது சிரிப்பு கலந்த பேச்சினாலும், எதார்த்தமான நடிப்பினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில், காமெடி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் இம்ப்ரஸ் செய்துள்ளார் என்றே சொல்லலாம்.

வினோதினி: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான, காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக காமெடி ரோலிலும் அசால்ட் காட்டி வருகிறார். அதிலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 திரைப்படத்தில், கோவை சரளாவுடன் இணைந்து காமெடியில் தெறிக்கவிட்டு இருப்பார். 

Also Read: 51 வயதிலும் குடிக்கு அடிமையான நடிகை ஊர்வசி.. தினமும் குறையாத தள்ளாட்டம்

ஊர்வசி: தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்தான் ஊர்வசி. அதிலும் தனது நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம், ரசிகர்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளார் என்ற சொல்லலாம். தற்பொழுது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் காமெடி ரோல்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.

ஜாங்கிரி மதுமிதா: லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரின் மூலம் புகழ்பெற்றவர் தான் மதுமிதா. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் மாஸ்காட்டி வரும் இவர் எண்ணற்ற சின்னத்திரை சீரியல்களிலும் காமெடி ரோலில் பிச்சு உதறி இருப்பார்.

Also Read: 40 வயதில் குழந்தை பெற்ற ஊர்வசி.. அச்சு அசல் அம்மாவை போல் இருக்கும் முதல் கணவரின் மகள்.!