Connect with us
Cinemapettai

Cinemapettai

devadarshini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேவதர்ஷினியை நடிகையாக மட்டும்தான தெரியும்.. ஆனா வேற ஒரு துறையில் பெரிய கில்லி தெரியுமா

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் தேவதர்ஷினி. இவர் சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார். தேவதர்ஷினி அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமை மூலம் தமிழ்நாடு பெஸ்ட் காமெடி அரசு விருதை வாங்கினார்.

அதன்பிறகு இவர் சீரியல் மற்றும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவரது நடிப்பில் சின்னத்திரையில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற பல சீரியல்கள் நடித்துள்ளார்.

சீரியல் மூலம் பிரபலமடைந்த தேவதர்ஷினி அப்படியே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்ற வைத்துள்ளனர். இவர் கிட்டத்தட்ட காமெடி கலாட்டா மிஸ்டர் மற்றும் மிஸஸ் சின்னத்திரை முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு நடுவராகவும் பணியாற்றி உள்ளார்.

devadarshini

devadarshini

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களின் வரிசையில் தேவதர்ஷினிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலுமே இவரது காமெடியை கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அந்த அளவிற்கு தனது காமெடி நடிப்பின் மூலம் பல ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.

தேவதர்ஷினி பொருத்தவரை நமக்கு காமெடி நடிகர் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் இவர் ஒரு மனநல மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாது.

அதுமட்டுமில்லாமல் தேவதர்ஷினி சினிமா துறையை சேர்ந்தவர் என்பதால் சினிமாவில் பணியாற்றக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் தேவதர்ஷினிடம் தனியாக சந்தித்து போதையின் அடிமையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதை பலரும் தன்னிடம் கேட்டதாகவும் அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top