செய்தி வாசிப்பாளர் பின் சினிமாவில் கலக்கிய 5 நடிகைகள்.. டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ப்ரியா பவானி

தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டும் விதமாக செய்தி வாசிப்பாளராய் இருந்து அதன்பின் சினிமாவில் இறங்கி கலக்கிய ஹீரோயின்கள் ஏராளம். தன்னை புதுப்பித்துக் கொண்டதன் பலனாக மக்களின் ஆதரவு பெற்று வருகின்றனர்.

மேலும் அதைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடியாகவும் இணைந்து மாஸ் காட்டி வருகின்றனர். அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் கலக்கிய 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: பார்ட்டியில் யாஷிகாவுடன் இறுக்கி அணைச்சு ஒரு முத்தா.. சர்ச்சையை கிளப்பிய அஜித் மச்சான் புகைப்படம்

ஃபாத்திமா பாபு: தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக 25 வருடத்திற்கு மேல் தன்னை வெளிகாட்டி கொண்டவர் ஃபாத்திமா பாபு. அதன் பின் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் பல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் குறிப்பாக கல்கி படத்தில் கோகிலாவாக இடம் பெற்ற இவர் நல்ல விமர்சனத்தை பெற்றார். நேருக்கு நேர், சொல்லாமலே,மின்னலே, சரோஜா போன்ற பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர்: 2011ல் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இடம் பெற்றவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பின் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் சினிமாவில் மேயாத மான் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட பல படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. டாப் ஹீரோக்களான தனுஷ், சிம்பு ஆகியோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சினிமாவை ஆட்சி செய்யும் ஓடிடி தளங்கள்.. அன்றே கணித்த உலக நாயகனின் வியூகம்

லாஸ்லியா: இலங்கையை சேர்ந்த சக்தி டிவியில், செய்தி வாசிப்பாளராக தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டவர் லாஸ்லியா. அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

உமா பத்மநாபன்: செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமானவர் உமா பத்மநாபன். மேலும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சிவாஜி படத்தில் ஹீரோயினின் தாயாக நகைச்சுவையில் அசைத்திருப்பார். அதன்பின் சபாபதி படத்திலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உண்மை கதைக்காக வெற்றிகண்ட 5 படங்கள்.. சூர்யாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம்

அனிதா சம்பத்: சன் டிவியில் செய்தி வாசிப்பவர்களாக அறிமுகமானவர் அனிதா சம்பத். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4ல் பங்கு பெற்ற இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. காப்பான், ஜங்கோ, மாஸ்டர் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த தெய்வம் மச்சான் என்னும் படத்தில் கதாநாயகியாகவும் இடம் பெற்றுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்