கல்யாணம், புருஷன் என வெறுக்கும் 5 நடிகைகள்.. அரை கிளவியானாலும் மவுசு குறையாத திரிஷா

கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகைகள் சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் 40 வயதை தொட்ட திரிஷா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக மாற துடித்துக் கொண்டிருக்கிறார்.

சுகன்யா: லேடி கமலஹாசன் என ரசிகர்களால் அழைக்கக்கூடிய சுகன்யா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதிலும் இவர் இந்தியன் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் தோன்றி தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். சுமார் 15 வருடங்களாக சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த சுகன்யா, 54 வயதானாலும் இன்னும் ஆண் துணை வேண்டாம் என அடம் பிடித்து திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

Also Read: பாடி ஷேமிங், அதிரடியாக 18 கிலோ உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி.. தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

திரிஷா: 40 வயதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா இப்போதும் மவுஸ் குறையாமல் ரசிகர்களின் கனவு கனியாகவே வலம் வருகிறார். அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பேரழகியாகவே காட்சியளித்தார். அதற்கு மாறாக சமீபத்தில் வெளியான ராங்கி படத்தின் மூலம் தன்னுடைய ராங்கி தனத்தை வெளிப்படுத்தி, லேடிஸ் சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கு துடி துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷெரின்: தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்தப்படத்தை தொடர்ந்து விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1, பீமா என சில படங்களில் நடித்தார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 3 தமிழில் கலந்துகொண்டு 4-வது இடம் பிடித்தார். மேலும் 39 வயதான ஷெரின், ஆண் துணையே வேண்டாம் என்று இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

Also Read: திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு.. 22 வருட சினிமா வாழ்க்கையில் இவ்வளவுதானா ?

வரலட்சுமி சரத்குமார்: சரத்குமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான இவர், போல்டான கேரக்டர்களை முதலில் தேர்வு செய்த நடித்துக் கொண்டிருந்தார். 38 வயதான இவர், விஷாலுடன் அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டாலும் திருமணம் செய்து விரும்பாத நடிகையாகவே இருக்கிறார். அதிலும் தற்போது 18 கிலோ எடை குறைவாக மாறி இருக்கும் வரலட்சுமி தெலுங்கு நிறைய படங்களில் கமிட் ஆகி ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறார்.

ரம்யா நம்பீசன்: குள்ளநரி கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு பாடகியாகவும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இவருடைய அழகான குரலுக்கு கிடைத்த வரவேற்பால் அதன் பின் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தாலும் தமிழில் எப்போதாவது தான் இவரை பார்க்க முடிகிறது. 38 வயதான இவரும் திருமணம், குழந்தை குட்டி போன்றவற்றை வெறுத்து தனித்து வாழவே விரும்புகிறார்.

Also Read: ஹீரோயின் தகுதியே கிடையாது என விரட்டப்பட்ட 6 நடிகைகள்.. எவ்வளவு காட்டியும் ஓப்பேராத ஷிவானி

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஆண்கள் துணை தனக்கு தேவையே இல்லை என்று நினைத்திருக்கின்றனர் அதிலும் அரை கிளவி ஆனாலும் த்ரிஷாவின் மவுசு மட்டும் குறையாமல் இருப்பது இளம் நடிகைகளை வியப்படைய வைக்கிறது

- Advertisement -