வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்த 5 நடிகைகள்.. திரிபுரசுந்தரி ஆக ஊர்வசி அடித்த லூட்டி

தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹீரோக்களே வில்லன், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் எனஅனைத்து விதமான, கேரக்டர்களிலும் கனக்கச்சிதமாக பின்னி பெடல் எடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நடிகைகளும் தற்பொழுது சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மாஸ் காட்டி வருகின்றனர். அப்படியாக எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் நடித்து அசத்திய 5 நடிகைகளை இங்கு காணலாம்.

மனோரமா: சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானவர்தான் நடிகை மனோரமா. இவர் தனது படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி காமெடி கதாபாத்திரங்களில் பிச்சு உதறி இருப்பார். அதிலும் விஜய், அஜித், கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் தனது அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவர் சினிமாவில் நடிப்பின் ஜாம்பவானாகவே திகழ்ந்து வந்தார்.

Also Read: மனோரமாவிற்கு பின் 750 படங்களில் நடித்த ஒரே நடிகை.. 60 வயதில் தேசிய விருதுக்காக எடுத்த புது அவதாரம்

சௌகார் ஜானகி: எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் உடன்  ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர் தான் சௌகார் ஜானகி. இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் காமெடியிலும் பின்னி பெடல் எடுத்துள்ளார். அப்படியாக ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த தில்லுமுல்லு படத்தில் ஆள் மாறாட்டம் செய்து தேங்காய் சீனிவாசனையே கிரங்கடித்திருப்பார். அதிலும் இவரின் நடிப்பானது சிவாஜி கணேசனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

ரம்யா கிருஷ்ணன்: சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். அதிலும் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி ஆக தனது வில்லத்தனத்தில் தெறிக்கவிட்டு இருப்பார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடனத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் தடம் பதித்துள்ளார். மேலும்   விவேக், மணிவண்ணன் ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியும் செய்து இருக்கிறார்.

Also Read: 51 வயதிலும் குடிக்கு அடிமையான நடிகை ஊர்வசி.. தினமும் குறையாத தள்ளாட்டம்

மீரா ஜாஸ்மின்: மலையாளத் திரை உலகில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். பரத் உடன் நேபாளி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதிலும் தனது சுட்டித்தனமான நடிப்பின் மூலம்  நகைச்சுவையிலும் பின்னி பெடல் எடுத்துள்ளார். அந்த வகையில்  சண்டக்கோழி, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஊர்வசி: தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்து  அறிமுகமானவர்தான் நடிகை ஊர்வசி. இதனை அடுத்து தனது  படங்களில் நக்கல் கலந்த பேச்சின் மூலம் நகைச்சுவை உணர்வை கொடுக்கக் கூடியவர். அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த  மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இவரின் உடல் மொழியும், பேச்சு மொழியும் இவரை நடிப்பின் ஊர்வசி என்று சொல்ல வைத்தது.

Also Read: ரன் படத்தில் நடித்த மீராஜாஸ்மினா இது? அடகொடுமையே புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

- Advertisement -

Trending News