எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து காணாமல் போன 5 நடிகைகள்.. புகழ் போதையால் அழிந்த ஓவியா

Disappeared 5 Actress: பெரும்பாலும் நடிகைகள் தேவையில்லாத வீண்வம்பில் மாட்டிக் கொண்டால் கேரியர் போய்விடும் என்று கண்ணும் கருத்துமாக எல்லா விஷயத்தையும் பார்த்து வருவார்கள். இப்படிப்பட்ட இவர்களுக்கு மத்தியில் சில நடிகைகள் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்தால் மட்டுமே பிரபலமாகலாம் என்று நினைத்து வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்கள். அப்படி பேசிய சில நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமலே காணாமல் போய்விட்டார்கள். அந்த நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

விஜயலட்சுமி: இவர் 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்தில் அமுதா என்ற கேரக்டரில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து கலகலப்பு, ராமச்சந்திரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் சீமானை குறித்து பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். இப்படி தொடர்ந்து பேசியதால் இவருடைய கேரியரை மொத்தமாக காலி ஆகிவிட்டது.

Also read: தேவயானியை சித்திரவதை செய்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த விஜயலட்சுமி

அமலா பால்: தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த இவருடைய மார்க்கெட் திடீரென்று அதல பாதாளத்திற்குள் விழுந்து விட்டது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்பதற்காக பல சர்ச்சையான விஷயங்களில் தாறுமாறாக நடித்து பெயரை கெடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், தேவையில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி இவருக்கு இவரே சூனியம் வைத்துக் கொண்டார்.

ஓவியா: இவர் என்னதான் படங்களில் நடித்து ஹீரோயினாக வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இவருக்கான இடத்தை பிடித்து விட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழும், பேரும் இவருக்கு அதிகமாகவே கிடைத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல் இவருக்கான பெயரை கெடுத்துக் கொள்ளும்படி பல விஷயங்களைப் பேசி வம்பு இழுத்து விட்டார். இதனாலே இவருடைய சினிமா கேரியர் முழுவதும் கவிழ்ந்து விட்டது.

Also read: யோகி பாபுவின் மசால் வடையாக வந்த ஓவியா.. அதிரடியாக வெளியான பூமர் அங்கிள் டிரைலர்

ரேகா நாயர்: சீரியலில் நடித்து வந்த இவர், இரவின் நிழல் திரைப்படத்தில் மேலாடை இன்றி நடித்தார். இதன் பின் பலதரப்பட்ட கருத்துக்களை மோசமாக அனைவரும் கொடுத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஷ்டத்துக்கு வாய்க்கு வந்த வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணி கண்ணா பின்னான்னு தாக்கி பேசி இருக்கிறார். அத்துடன் நடுரோடு என்று கூட பார்க்காமல் திரைப்பட விமர்சகர் ஆன பயில்வான் உடனும் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து தேவையில்லாத பல விஷயங்களில் மூக்கை நுழைத்து இப்படித்தான் இருக்கணும் இதுதான் கரெக்ட் என்கிற மாதிரி பேசக்கூடியவர். அதனால் இப்பொழுது சீரியலில் நடிப்பது கூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அஞ்சலி: பொதுவாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதிலும் தைரியமான பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்து பலர் மனதையும் கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சில சமயங்களில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காத அளவிற்கு வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை காயப்படுத்தி விடுவார். இதனால் இவர் நடிப்பதற்கான கதாபாத்திரம் சரியாக அமையாமல் தற்போது தட்டு தடுமாறி கொண்டு வருகிறார்.

இப்படி இந்த நடிகைகள் அனைவரும் இவர்களுக்கு இருந்த நல்ல இமேஜை கெடுத்துக் கொண்டு, சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்கு வந்த தலைக்கனம் தான் என்றே சொல்லலாம்.

Also read: பிக் பாஸ் போனது தான் நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

Next Story

- Advertisement -