விஜய்க்கு கனகச்சிதமாக பொருந்திய 5 நடிகைகள்.. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இடுப்பழகி சிம்ரன்

பொதுவாக படத்தில் கதை, இசை, சண்டைக் காட்சிகள் போன்றவை ஒரு ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஹீரோயின் பொருத்தமும் மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு தளபதி விஜய் நிறைய ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அந்த வகையில் கனகச்சிதமாக பொருந்திய முதல் ஐந்து ஜோடிகளை பார்க்கலாம்.

ரம்பா : தொடையழகி என ரசிகர்களால் புகழப்படும் ரம்பா விஜய் உடன் கனகசிதமாக பொருந்த கூடியவர். இந்த லிஸ்டில் ரம்பா ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, என்றென்றும் காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சுக்கிரன் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

Also Read : அஜித்தின் வெற்றி கூட்டணியை இணையவிடாமல் செய்த சதி.. இயக்குனருக்கு கட்டளை போட்ட விஜய்யின் மாமா.!

அசின் : டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அசினுக்கு மிகவும் பொருந்தக் கூடியவர் விஜய். இவர்கள் இருவரும் போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறந்த ஜோடிகள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர்.

சமந்தா : விஜயுடன் கணக்கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகைகளில் ஒருவர்தான் சமந்தா. இவர்களது கெமிஸ்ட்ரி திரையில் அவ்வளவு அழகாக அமைந்துள்ளது. அந்த வகையில் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : கம்பேக் கொடுக்க மாட்டாங்களா என ஏங்க வைத்த 5 ஹீரோயின்கள்.. இருக்கும் இடம் தெரியாமல் போன விஜய் பட ஹீரோயின்

திரிஷா : விஜய்க்கு சரியான ஜோடி என்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் திரிஷா. கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என த்ரிஷா விஜய் இருவரும் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்கள் லியோ படத்தில் இணைந்துள்ளார்கள்.

சிம்ரன் : விஜய்க்கு சரியான போட்டி கொடுக்கக்கூடிய நடிகை என்றால் சிம்ரன் தான். அதாவது விஜய்க்கு இணையாக நடனம் ஆடுவார். சிம்ரன் விஜய் இருவரும் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, ஒன்ஸ்மோர், உதயா போன்ற படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். எவர்கிரீன் ஜோடிகளில் விஜய், சிம்ரன் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர்.

Also Read : அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

Next Story

- Advertisement -