கமலுடன் நடித்து ரஜினியுடன் நடிக்காத 5 நடிகைகள்.. இன்று வரை வருத்தப்படும் புன்னகை அரசி

தன் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் பெயரை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் தான் ரஜினி, கமல் என்ற இரண்டு ஜாம்பவான்கள். இவர்கள் இருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நினைக்காத ஹீரோயின்களே இருக்க முடியாது.

நடிகைகளை பொறுத்தவரை என்னதான் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கமல் மற்றும் ரஜினி உடன் இணைந்து ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவ்வாறு வாய்ப்பு பெறாத நடிகைகளை அதிர்ஷ்டம் இல்லாத நடிகைகள் என்று தானே கூற வேண்டும். அந்த அதிர்ஷ்டத்தை இழந்த ஐந்து நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read:கமலால் ஏற்பட்ட நஷ்டம்.. 5 படங்களை எடுத்து கடனை அடைத்த தயாரிப்பாளர்

ஊர்வசி: 80-90களில் தன்னுடைய சாதுவான தோற்றத்தாலும் மற்றும் எளிமையான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் சிறந்த கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ஊர்வசி. 1990ல் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமல்- ஊர்வசி இருவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் பாடலில் இவர்களின் ஜோடி பொருத்தம் அசத்தலாக இருந்தது. இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஊர்வசிக்கு ஒரு பட வாய்ப்பும் வராதது அவருக்கு இன்று வரை ஒரு குறையாக இருக்கிறது.

சுகன்யா: இவர் சினிமாவில் இப்போது நடிக்காவிட்டாலும் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். படங்களில் தனக்கு கொடுக்கக்கூடிய எந்த கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர். இவர் கமலுடன் இணைந்து நடித்த மகாநதி மற்றும் இந்தியன் வெற்றி நடை போட்டது. மேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை இழந்த நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Also Read:ரஜினியை சுற்றி வளைக்கும் 7 தயாரிப்பாளர்கள்.. நண்பனுக்காக யோசிக்கும் சூப்பர் ஸ்டார்

தேவயானி: பெரும்பாலும் சினிமாவில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த பெருமை இவரையே சேரும். இவர் கமலுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவர் படங்களில் சிறிய ரோலில் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினியுடன் நடிக்க தமக்கு எந்த ஒரு வாய்ப்பும் வராதது வேதனைப்படுத்துவதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவ்வாய்ப்பினை தவற விட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

சினேகா: 2004ல் சரண் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த படம் தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாப்பு என்ற கேரக்டரில் வலம் வந்திருப்பார் சினேகா. இவர்களின் காம்பினேஷனில் வந்த அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவரும் ரஜினியுடன் இணைந்து நடிக்காதது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட செய்கின்றது.

Also Read:சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

அசின்: பாலிவுட்டில் நடிக்கப் போவதாக கூறி தமிழ் சினிமா வாய்ப்பினை தவறவிட்டவர் தான் அசின். நடிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அடித்தது போல் கமலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தசாவதாரத்தில் கமலுடன் இணைந்து ஆண்டாள் என்னும் பிராமண பெண் கேரக்டரில் தத்ரூபமாக நடித்திருப்பார். இருப்பினும் இவருக்கும் ரஜினி உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்