எம்ஜிஆர் உடன் அதிகமாக ஜோடி போட்ட 5 நடிகைகள்.. சொத்துக்களையும் நகைகளையும் அள்ளிய ரெண்டு ஆசை நாயகி

5 actresses who acted together with MGR: 60-70களில் சினிமாவிற்காகவே அர்ப்பணித்த இரண்டு நடிகர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்த வகையில் எம்ஜிஆர் நடிப்பாலும், பேச்சாலும், நற்குணங்களாலும் பலரையும் கவர்ந்து புரட்சித் தலைவராக ஜொலித்திருக்கிறார். அதனாலேயே இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படி இவருடன் சேர்ந்து அதிகமாக நடித்த நடிகைகளும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இவருடைய ஆசை நாயகியாக இரண்டு நடிகைகளும் அதிக படங்களில் கைகோர்த்து இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் இருவர்களுக்கும் எம்ஜிஆர் வைத்திருந்த சொத்துக்களையும் நகைகளையும் அள்ளிக் கொடுத்து இருக்கிறார். அவர்கள் யார் என்றால் ஜெயலலிதா மற்றும் லதா.

ஜெயலலிதா உடன் கிட்டத்தட்ட 28 படங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற இரண்டு படங்களுமே அதிக வசூலை கொடுத்து மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக நடிகை லதா உடன் சேர்ந்து 12 படங்களில் நடித்திருக்கிறார். நாளை நமதே, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், உரிமைக்குரல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

இவர்களுக்கு அடுத்தபடியாக நடிகை சரோஜா தேவி, எம்ஜிஆர் உடன் சேர்ந்து 26 படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய காம்போ எப்போதுமே வெற்றி கூட்டணி தான் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடத்தில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அதிலும் மறக்க முடியாத படமாக எங்கள் வீட்டுப் பிள்ளை மற்றும் அன்பே வா படங்கள் இப்பொழுதும் பலரின் ஃபேவரிட் படமாக இடம் பெற்று இருக்கிறது.

அடுத்ததாக நடிகை பானுமதி 10 படங்களில் நடித்திருக்கிறார். மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம் போன்ற படங்களிலும் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நடிகை கேஆர் விஜயா, எம்ஜிஆர்-க்கு ஜோடியாக 8 படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் மறக்க முடியாத படமாக நான் ஏன் பிறந்தேன், தாழம்பூ, நான் நினைத்தால் போன்ற படங்களில் மூலம் இவர்களுடைய ஜோடி மக்களிடம் மிகவும் வரவேற்கப்பட்டது. இவர்கள்தான் எம்ஜிஆர் உடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகள்.

Also read: மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி தளபதி விஜய் வரை.. இதுவரை கட்சி ஆரம்பித்த 11 நடிகர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்