தங்கையாக நடித்து பின் ஜோடி போட்ட 5 நடிகைகள்.. ஜெயம் ரவியை கண்ணசைவில் சுத்த விட்ட குந்தவை

Actress Trisha: எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவர்களையே சிறந்த கலைஞர் என கருதப்படுவார்கள். அவ்வாறு இது போன்ற திறமை கொண்ட பல ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சில படங்களில் தங்கை கதாபாத்திரம் ஏற்றும் அதே நடிகருடன் ஜோடியாகவும் இணைந்து நடித்த ஹீரோயின்கள் ஏராளம். அவ்வாறு இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து அசத்திய 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ராசி இல்லை என ஓரம் கட்டப்பட்ட விஜய் பட ஹீரோயின்.. மார்க்கெட் சரிந்ததால் எடுத்த அதிரடி முடிவு

ரஜினி- விஜயசாந்தி: ரஜினி இரு வேடத்தில் நடித்த வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்ற படம் தான் நெற்றிக்கண். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக விஜயசாந்தி இடம் பெற்றிருப்பார். அதை தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படம் தான் மன்னன். கர்வம் கொண்ட கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடித்திருப்பார். இருப்பினும் இப்படத்தில் இவர்கள் இடையே மோதல் காதலாகி வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் விஜய சாந்தி.

நாசர் -ரம்யா கிருஷ்ணன்: 1999ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் தான் படையப்பா. இப்படத்தில் கூடுதல் சிறப்பை பெற்று தந்த நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு அண்ணனாக நாசர் நடித்திருப்பார். அதை தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படம் தான் பாகுபலி. ராஜ மாதாவின் கணவனாக நாசர் நடித்திருப்பார். இரு படங்களிலும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வேற லெவலில் பேசப்பட்டிருக்கும்.

Also Read: திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

ஜெயம் ரவி- திரிஷா: சகலகலா வல்லவன், உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்திருப்பார்கள். பெரிதும் பேசப்பட்ட இந்த ஜோடி மேற்கொண்டு தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா கதாபாத்திரத்தில் குந்தவையாக திரிஷா இடம்பெற்று இருப்பார். இவ்விரண்டு படங்களிலும் திரிஷா தன் கண்ணசைவில் ஜெயம் ரவியை சுத்த விட்டிருப்பார்.

விக்ரம்-திரிஷா: சாமி, பீமா போன்ற படங்களில் ஜோடியாய் இணைந்து கலங்கிய பிரபலங்கள் தான் விக்ரம்- திரிஷா. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்த இந்த ஜோடி மேற்கொண்டு பொன்னின் செல்வன் படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், அவரின் தங்கையான குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருப்பார்கள். கரிகாலனுக்கு பொறுப்பான தங்கை கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் திரிஷா.

Also Read: போட்ட காசை எடுக்க முடியாமல் மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

சித்தார்த்- ஹன்சிகா: ஓ மை பிரண்ட், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதைத்தொடர்ந்து அரண்மனை 2 படத்தில் சித்தார்த்தின் தங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் ஹன்சிகா. ஜோடியாக நடித்தும் பின் பழிவாங்கும் கதாபாத்திரத்திலும் சிறப்புற நடித்திருப்பார் ஹன்சிகா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்