சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மாடர்ன் ரோலில் நடித்து மொக்கை வாங்கி 5 நடிகைகள்.. சரி வராதுன்னு கிராமத்து கேரக்டருக்கு திரும்பிய கனகா

ஹீரோயின்களை பொறுத்தவரை கதைக்குரிய கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும், ஒரு சில கேரக்டர்க்கு தான் மக்கள் இடையே நல்ல விமர்சனங்கள் கிடைக்கின்றன. அதை பொறுத்து நம் முகபாவனைக்கு தகுந்த கேரக்டரை தேர்வு செய்து படம் நடிப்பது என்பது புத்திசாலித்தனம்.

இதை மனதில் கொண்டு நடித்த ஹீரோயின்கள் பலர் தமிழ் சினிமாவில் சாதித்தது உண்டு. அவ்வாறு இல்லாமல் கிராமத்து கெட்டப்பில் இருந்து மாடர்ன் கெட்டப்பிற்கு மாறி கேரியரை தொலைத்தவர்களும் உண்டு. இதுபோன்று பொருத்தமே இல்லை என்றாலும் மாடர்ன் ரோலில் நடித்து மொக்கை வாங்கிய 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: மனோரமா நடிப்பில் பட்டையை கிளப்பிய 8 கேரக்டர்கள்.. வில்லத்தனத்திலும் முத்திரை பதித்த ஆச்சி

சரிதா: சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் சரிதா. இவர் பெரும்பாலும் கிராமத்து கெட்டப்பில் நடித்த படங்கள் இவருக்கு வெற்றி வாகை சூடி தந்தது. அதன் பின் 1985ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படமான கல்யாண அகதிகள் என்னும் படத்தில் ஆண் தோழர்கள் யாரும் இல்லை என்பதற்காக மாடர்ன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். ஆனால் அவை இவருக்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் மக்களை முகம் சுளிக்க வைத்தது என்றே கூறலாம்.

ரேகா: 80-90களில் ஜெனிபர் டீச்சர் என்னும் கதாபாத்திரத்தில் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் ரேகா. அதை தொடர்ந்து பல படங்களில் குடும்பப் பாங்காகவும் மற்றும் கிராமத்து கெட்டப்புகளில் வெற்றி கண்டவர். அதன் பின் இவர் மேற்கொண்ட மாடர்ன் கதாபாத்திரங்கள் போதிய அளவு இவருக்கு கை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

Also Read: எல்லோருக்கும் முன்னிலையில் ஆடையை கழட்ட சொன்ன இயக்குனர்.. மனவேதனையுடன் நடிகை செய்த காரியம்

சீதா: 1985ல் ஆண்பாவம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் சீதா. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதைத் தொடர்ந்து குரு சிஷ்யன் படத்தில் கொஞ்சம் மாடர்னாக நடித்தார். ஆனால் இவரை மக்கள் கடைசி வரை இந்த கதாபாத்திரத்திலேயே பார்க்க விருப்பப்பட்டதனால் இவர் மாடர்ன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா: 1980ல் தைப்பொங்கல் என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அர்ச்சனா. இவர் குடும்பம் பாங்காக இடம்பெற்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 1983ல் வசந்தமே வருக என்னும் படத்தில் நீச்சல் உடையில் இடம் பெற்று போதிய வரவேற்பு கிடைக்காமல் மேலும் தன்னை கிராமத்து கேரக்டருக்கு செட்டாக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கரகாட்டக்காரன் கனகா ஞாபகம் இருக்கிறதா.? திருமணம் ஆகாமல் திசைமாறிய மர்மங்கள் நிறைந்த வாழ்க்கை

கனகா: 1989ல் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கனகா. அதை தொடர்ந்து பல குடும்ப பாங்கான படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இருப்பினும் 1995ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த பெரிய குடும்பம் என்னும் படத்தில் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது அவருக்கு போதிய விமர்சனத்தை பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News