சிம்பு வலையில் சிக்கிய 5 நடிகைகள்.. ஆனால் இன்னும் விர்ஜின்னு சொல்லும் புளுகு மூட்டை

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் சிம்பு. இவருடன் பல நடிகைகள் இணைத்து கிசுகிசுக்கள் வந்துள்ளன. அந்த நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

சார்மி : காதல் அழிவதில்லை படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தவர் சார்மி. இப்படத்தை தொடர்ந்து காதல் கிசு கிசு, 10 என்றதுகுள்ள போன்ற படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் முதல் காதல் சார்மி என்று கூட சொல்லலாம். இந்தப் படத்திலேயே இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே இந்த காதல் பிரேக் அப் ஆனது.

ஐஸ்வர்யா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஐஸ்வர்யா கல்லூரி படிக்கும் போது சிம்புவை காதலித்துள்ளார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகளால் கடும் சண்டை வெடித்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

நயன்தாரா : சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வல்லவன் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடித்து இருந்தனர். இப்படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் சில ஆண்டுகள் காதலித்து வந்த நயன்தாரா, சிம்பு இருவரும் மனக்கசப்பால் பிரிந்து விட்டனர்.

ஹன்சிகா : வாலு படத்தின் போது சிம்பு மற்றும் ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த காதலும் சிம்புக்கு நிலைக்கவில்லை. ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டனர்.

வரலட்சுமி : சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தின் படப்பிடிப்பு போது இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த காதலும் முடிவுக்கு வந்தது.

நிதி அகர்வால் : ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால். சிம்புவும், நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும் இவர்களது திருமணம் விரைவில் நடக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனால் சிம்புக்கு திருமணம் ஆகும் என்ற சந்தோசத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் நிதி அகர்வால் இதுக்கெல்லாம் மறுப்பு தெரிவித்து நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என நிதி அகர்வால் கூறியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News