Entertainment | பொழுதுபோக்கு
கடைசிவரை சைடு கேரக்டரிலே நடித்து மரணித்த 5 நடிகர்கள்.. முந்தானை முடிச்சு படத்தில் அசத்திய நாட்டாமை
சினிமாவில் வரும் சில கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வாறு சில நடிகர்கள் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவ்வாறு சைடு கேரக்டரில் கடைசிவரை நடித்த பிரபலங்களை பார்க்கலாம்.
ஆர் எஸ் மனோகர் : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஆர்எஸ் மனோகர். இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இலட்சுமி, அதிசய பெண், காவல்காரன், அடிமைப்பெண், ஊர் சுற்றும் வாலிபன், இதயக்கனி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மனைவி ரெடி என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்திருந்தார்.

Rsmanokar
கே கே சௌந்தர் : தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் கே கே சௌந்தர். இவர் கிழக்கே போகும் ரயில், மண்வாசனை, பெரிய தம்பி, ஜெயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியின் அப்பாவாக கேகே சௌந்தர் அசத்தியிருப்பார். மேலும் சூர்யா, சினேகா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து படத்தில் கடைசியாக சௌந்தர் நடித்திருந்தார்.

Kksoundar
சண்முகசுந்தரம் : தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் சண்முகசுந்தரம். உன்னைத் தேடி, நீ வருவாய் என, எதிரும் புதிரும், தாவணிக்கனவுகள், சென்னை 600028, சரோஜா என பல படங்களில் சண்முகசுந்தரம் நடித்துள்ளார். அதிலும் கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் அப்பாவாகவும் காந்திமதி தம்பியாகவும் சண்முகசுந்தரம் நடித்து அசத்தியிருப்பார்.

shunmugasundaram
எல் ஐ சி நரசிம்மன் : எல்ஐசி அதிகாரியாக இருந்த இவர் சினிமா மீதுள்ள ஆசையால் விருப்ப ஓய்வு பெற்ற படங்களில் நடிக்க வந்தார். இவர் 1975 இல் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். புதுவசந்தம், தர்மா, நினைவிருக்கும் வரை என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் நின்னுக்கோரி வரணும் என்ற இவருடனான நகைச்சுவை பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

shunmugasundaram
பூர்ணம் விஸ்வநாதன் : தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். இவர் வருஷம் 16, தில்லுமுல்லு, மகாநதி, மூன்றாம் பிறை, ஆண்பாவம், புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஆசை படத்தில் சுபலட்சுமியின் அப்பாவாக நடித்திருந்தார்.

poornam-Viswanathan
