2வது இன்னிங்ஸில் ஒரு கலக்கு கலக்கி இறந்து போன 5 நடிகர்கள்.. காமெடியில் தனுசுக்கு இணையாய் கலக்கிய பிரதாப்

தன்னுடைய மாறுபட்ட திறனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க போராடும் கலைஞர்கள் ஏராளம். அவ்வாறு தன்னை நிரூபித்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது. தான் விரும்பும் கதாபாத்திரத்தை காட்டிலும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை ஏற்கும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது இரண்டாவது இன்னிங்சில் வெற்றியை தந்த நடிகர்கள் பலர் உண்டு. இதுபோன்று கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தன் களம் இறங்கி தன்னை நிரூபித்த 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: தனுஷ் மோசமாக வேட்டையாடிய 7 நடிகைகள்.. ஓவராகவே போய் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன்

விஜயன்: கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். மேலும் வில்லனாக பல படங்களில் நடித்து மக்களின் விமர்சனங்களை பெற்றவர். இதை தொடர்ந்து இவர் நடித்த படங்களில் உதிரும் பூக்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக 2007ல் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் கதிரின் அப்பாவாக இடம் பெற்றிருப்பார். அதன்பின் உடல்நிலை குறைவால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதாப் போத்தன்: பல திறன் கொண்ட இவர் 100க்கு மேற்பட்ட படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன் திறமையை வெளிகாட்டியவர். மேலும் மலையாள மொழி படங்களில் நடித்த இவர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் குறிப்பாக 2009ல் வெளிவந்த படிக்காதவன் படத்தில் தனுஷுக்கு அப்பாவாக இடம் பெற்று இருப்பார். மேலும் இப்படத்தில் தனுஷுக்கு நிகராக இவரின் நகைச்சுவை இடம்பபெறும் காட்சிகள் மக்களை பெரிதும் கவர்ந்தது. இத்தகைய கலைஞரை சினிமா இழந்தது என்றே கூறலாம்.

Also Read: ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொன்ன சந்தானத்துக்கு பதிலடி.. நான் நானாகத்தான் இருப்பேன் என்று சொன்ன சூரி

பாண்டியன்: 90களில் சப்போர்ட்டிங் ரோலில் இடம்பெற்ற இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டிருக்கிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். அதிலும் 2001 அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் சிட்டிசன். இப்படத்தில் வாப்பா கதாபாத்திரத்தில் இடம் பெற்ற இவரின் நடிப்பு ரசிக்கும் விதமாக அமைந்தது. இவரையும் தமிழ் சினிமா இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுவரன்: படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் களமிறங்கியவர் தான் ரகுவரன். இவரின் நடிப்பை பாராட்டத்தவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர். ஒரு காலகட்டத்தில் சினிமாவுக்கு இடைவெளி விட்டு காணப்பட்ட இவர் தன் இரண்டாவது இன்னிங்ஸில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் யாரடி நீ மோகினி என்னும் படத்தில் பொறுப்பான அப்பாவாக இவரின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also Read: நகைச்சுவை மட்டுமில்லை பாட்டிலும் பலே கில்லாடி.. வடிவேலு பாடகராக ஜொலித்த 5 பாடல்கள்

விசு: நல்ல தத்துவம் மற்றும் கருத்து நிறைந்த படங்களை எழுதியும்,இயக்கியும் மற்றும் நடித்தும் தன்னை நிரூபித்துக் கொண்டவர் விசு. அதிலும் முக்கியமாக கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் கதை எழுதி இருக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் தன்னை நிரூபித்துக் கொண்டவர். அதன்பின் தன் இரண்டாவது இன்னிங்ஸில் சப்போர்ட்டிங் ரோலில் அசத்தி வந்த இவரை திரைத்துறை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்