வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கடவுள் மாதிரி நடிக்கிறேன்னு சந்தி சிரித்த 5 ஹீரோக்கள்.. கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளான அஜித் படம்

5 Actors Who Acted Like God: பொதுவாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற கெத்தான கேரக்டரில் நடிப்பதில் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சில நடிகர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை ரொம்பவே தைரியமாக நடிக்க முன் வருவார்கள். அந்த வகையில் கடவுள் மாதிரியான கேரக்டரில் நடித்த சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

ரஜினி: பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு உழைப்பாளி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ரோஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, தமிழரசன் என்ற கேரக்டரில் தினசரி கூலித் தொழிலாளியாக நடித்தார். இதில் வரும் காட்சியில் காவல்துறையினரிடம்  இருந்து தப்பிக்க முயற்சிக்கும் பொழுது சிவபெருமானை போல் வேடத்தை போட்டிருப்பார். அப்பொழுது ரோட்டில் வந்த பூசாரி பைக்கில் ஏறிக்கொண்டு ரஜினி செய்யும் அட்ராசிட்டி சிரிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

Also read: 90களில் அதிக செல்வாக்குடன் இருந்த 8 ஹீரோக்கள்.. கமலை தாண்டி சிவாஜிக்கு போட்டி ரஜினி மட்டுமே

கமல்: மௌலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பம்மல் கே சம்பந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் கமல் நடிகராக நடிக்கும் ஒரு காட்சியில் சிவபெருமான் போல் வேடம் போட்டு வாயிலில் பப்பிள் காம் வைத்து முட்டையிட்டு, கழுத்தில் இருக்கும் பாம்புடன் விளையாடி நகைச்சுவையாக நடித்திருப்பார். இதில் இவருடைய நடிப்பு பார்க்கவே காமெடியாக இருக்கும்.

அஜித்: செல்ல அய்யாவு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ஆழ்வார் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அசின்,விவேக், மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். இதில் அஜித் அவருடைய எதிரிகளை அழிக்கும் பணியில் விஷ்ணுவாக மாறி அவதாரம் எடுத்திருப்பார். ஆனால் விஷ்ணு மாதிரி வேஷம் போட்டு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்து சர்ச்சையை எழுப்பியது. அதனாலேயே அஜித் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவஸ்தை பட்டார்.

Also read: மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.. பக்கா பிளான் போட்ட மகிழ்திருமேனி

சூர்யா: பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இதில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா, கண்ணபிரான் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அத்துடன் இதில் வரும் உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு சூர்யா, முருகன் போல் வேஷம் போட்டு காட்சியளித்திருப்பார். மேலும் இந்த பாடலில் முருகப்பெருமானை பற்றிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தி சூரியாவை சிக்கலில் ஆழ்த்தியது.

விஷால்: சபா அய்யப்பன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு தோரணை திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விஷால் ஸ்ரேயாவிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோவிலில் ராமன் போல் வேஷம் போட்டு கடவுளாக நடித்து ஏமாற்றி இருப்பார். இதை பார்ப்பதற்கு முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும்.

Also read: 87 கோடி வசூலுடன் முரட்டு இயக்குனருடன் கைகோர்த்த மார்க் ஆண்டனி.. விக்ரம் இடத்தைப் பிடிக்கும் விஷால்

- Advertisement -

Trending News