பாதி எடுத்து முடிக்க முடியாமல் திணறும் 5 நடிகர்கள்.. பிசினஸ் ஆகாமல் அலமாரியில் மோகன் படம்

5 actors who are struggling to finish half: தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதுப்புது இயக்குனர்களும், புது புது நடிகர்களும் உருவாகிக்கொண்டே வந்தாலும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கும், படைப்புகளை வெளிப்படுத்துவதற்கும் காலம் கனியாமல் தவித்து வருவது தமிழ் சினிமாவின் பலகினமே!

வாரிசு நடிகர்களும், முன்னணி நடிகர்கள் சிலரும் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதில் சிலர் இதோ,

துருவா சார்ஜா: ஆக்சன் கிங் அர்ஜுனின் மருமகன் கன்னட நடிகர் துருவா சார்ஜா அவர்கள், அவரது மாமா அர்ஜுனின் திரைக்கதையில் மார்ட்டின் என்கின்ற பான் இந்தியா மூவியில்  நடித்து முடித்து உள்ளார்.

புதுமையான கதை அம்சத்துடன் ஆக்ஷனில் தெறிக்கவிடும் இந்த மார்ட்டின்  கடந்த ஆண்டு டீசரை வெளியிட்டு ரசிகர்களிடையே அதிக ஹைப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் முரளி: விஷ்ணு வரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் இதயம் முரளியின் வாரிசு ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர்,

இருவரும் ரொமான்டிக் ஜானரில் ஒரு தரமான காதல் கதையில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெற்றது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகலாம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மோகன்: 80ஸ்களில் கொடி கட்டி பறந்த தமிழ் நட்சத்திரம் மோகன் அவர்கள் தற்போது கோட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுக்க உள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற திரில்லர் கதையில் நடித்துள்ளார் மோகன். 

மோகன் முன்னணி நடிகராக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதால் பலரும் எதிர்பார்த்து இருக்கும் இத்திரைப்படம் பலவித தாமதங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் அறிமுகமாகும் சங்கரின் வாரிசு

அர்ஜித் சங்கர்: காதல், வழக்கு எண் 18/9 போன்ற படங்களை தயாரித்த பாலாஜி சக்திவேல் சில வருட இடைவெளிக்கு பின் இயக்குனர் சங்கரின் மகன் அர்ஜித் சங்கரை வைத்து படம் இயக்குவதாக அறிவித்துள்ளார். 

அனேகமாக இத்திரைப்படம் காதல் படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

மணிகண்ட பிரபு: பிரபல காமெடி நடிகர் செந்தில் அவர்களின் மகன் மணிகண்ட பிரபு ஏற்கனவே “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருந்தார். 

பல்வேறு காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்படவே மீண்டும் பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ஒரு புதிய படத்தில் செந்திலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்