விளம்பரத்திற்காக மட்டுமே துணிவில் இறக்கி விடப்பட்ட 4 பேர்.. ப்ரோமோஷனுகாக துணிவு செய்த தந்திரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் மிகவும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி உள்ளது. அதிலும் வினோத் மற்றும் அஜித் இருவரும் துணிவு படத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரையும் மிரட்டி விட்டதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து படத்தில் ரொமான்ஸ், மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், அடிதடி, ரேசிங் என படம் மொத்தத்தையும் அமர்க்களப்படுத்தி உள்ளனர்.

அதிலும் பரபரப்பான கதைகளத்துடன் கூடிய சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் என மேலும் பலம் சேர்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாகவும் அதன் இரண்டாம் பகுதி சுவாரசியத்தையும் கொடுக்கக் கூடிய விதத்திலும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் துணிவு திரைப்படமானது தற்போது வசூலில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

Also Read: துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்

இன்றைய காலகட்டத்தில் தற்பொழுது ரசிகர்கள் அதிக அளவு சமூக வலைதளங்களிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதனாலே யார் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளனர் என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்கின்றனர். துணிவு பட குழுவானது யார் யார் இப்பொழுது சமூக வலைகிற தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளனர் என்பதை தேர்ந்தெடுத்து அவர்களை படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். 

இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் அமீர் ஒரு நடன இயக்குனர். துணிவு படத்தில் அனைத்து பாடல்களுக்கும் கோரியோகிராபர் செய்தது மட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் 5 இருந்ததன் மூலமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். யூடியூபில் இல் பிரபலமான இவர்கள் என்ன மாதிரியான கேரக்டரில் நடித்து உள்ளனர் என்பதற்காகவே துணிவு படத்திற்கு ரசிகர் கூட்டம் அதிகமானது. ஜிபி முத்து, பவானி, அமீர் மற்றும் பேச்சாளர் மோகனசுந்தரம் இவர்களை துணிவு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். 

Also Read: யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

இவர்கள் அனைவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதினால் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர். பொதுவாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது ஆனால் இந்த முறை ஒரு புது முயற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இது மாதிரியான தந்திரங்களை துணிவு பட குழுவானது செய்துள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட துணிவு பட குழுவானது இதனை தந்திரமாக தங்களின் படத்தின் வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டனர். இவர்களை துணிவு படத்தில் நடிக்க வைத்தது மட்டுமல்லாமல் அவர்களைக் கொண்டே படத்தின் பிரமோஷன் காண வேலைகளையும்  சூசகமாக செய்துள்ளனர்.

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளதால் அதுவும் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய அஜித் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று நினைத்த நிலையில் ரொம்பவும் டம்மி ஆகிவிட்டது. இவர்களை படத்தில் நடிக்க வைப்பதற்கான காரணமே படத்தின் ப்ரோமோஷன்காக மட்டுமே என்று தோன்றுகிறது.

Also Read: கடைசி நேரத்தில் அஜித்தை கழட்டி விட்ட போனி கபூர்.. சத்தமில்லால் நடந்த துணிவு படத்தின் பஞ்சாயத்து

- Advertisement -