கடைசி நேரத்தில் அஜித்தை கழட்டி விட்ட போனி கபூர்.. சத்தமில்லால் நடந்த துணிவு படத்தின் பஞ்சாயத்து

நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடித்த துணிவு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அஜித்தின் சமீபத்திய ரெக்கார்டுகளில் இந்தப் படம் தான் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது

துணிவு படத்தின் மிகப்பெரிய வரவேற்பிற்கு மிக முக்கிய காரணம் எட்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் நேரடியாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுவது தான். இதையும் தாண்டி இந்தப் படத்தின் பெரிய அளவு ரீச்சுக்கு காரணம் துணிவு படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான்.

Also Read: சர்க்கரை பொங்கலாக இனிக்கும் துணிவு.. அஜித்தை கொண்டாடும் ஆடியன்ஸ், முக்கியமான 5 காரணங்கள்

ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை வாங்கவில்லை என்றால் இப்படி ஒரு ரீச் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம்தான். நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விட அதிக தியேட்டர்களை கைவசப்படுத்தி இருக்கிறது துணிவு திரைப்படம். துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியதன் பின்னணி காரணம் இப்போது தான் வெளிவந்து இருக்கிறது.

துணிவு திரைப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்தார். இதற்கு முன்பாக இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் என்னவோ இந்த துணிவு திரைப்படத்திற்கான எந்த நிதியையும் போனி கபூர் சரியாக கொடுக்கவில்லையாம்.

Also Read: வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் விமர்சனம் கூறிய பயில்வான்

போனி கபூர் இப்படி திடீரென்று மக்கர் பண்ணியதால் தான் நடிகர் அஜித்தும் படப்பிடிப்பை விட்டு பைக் ரைடடுக்கு கிளம்பி இருக்கிறார். இந்தப் பிரச்சினையை கேள்விப்பட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் தானாக முன்வந்து படத்திற்கு தேவையான தொகையை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் முற்றிலுமாக இந்தப் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

எனவே துணிவு திரைப்படம் எப்படியோ மொத்தமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சொந்த படமாக ஆகிவிட்டது. அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்திற்காக அத்தனை தியேட்டர்களையும் வளைத்துப் போட்டு இருக்கிறார். இனி லாபமோ , நஷ்டமோ துணிவு படத்தின் மொத்த பொறுப்பும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தான்.

Also Read: அழுத்தமான மெசேஜ் சொல்லும் மாஸ் ஹீரோ அஜித்.. சரவெடியாக வெளிவந்த துணிவு எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்