விஜய்யை வெளியில் தலை காட்ட முடியாமல் அவமானப்படுத்திய 4 பேர்.. இடம் பொருள் தெரியாம கரிச்சி கொட்டும் அருவா நடிகர்

Vijay Name Spoiled: கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலே அவரை தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். அதிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யை பற்றி சொல்லவே வேண்டாம். எங்கடா ஏதாவது ஒரு விஷயம் கிடைக்காதா என்று பலரும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடிக் கொண்டு அலைகிறார்கள். அந்த வகையில் இவரை வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு நான்கு பேர் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது வெங்கட் பிரபு எந்த அளவிற்கு இயக்குனராக தெரியுமோ, அதே போல பப்பு, பார்ட்டி போன்ற விஷயங்களை ஜாலியாக பிரண்ட்ஸ்களை வைத்து சுத்தக் கூடியவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அப்பொழுது ஒரு பார்ட்டியில் விஜய் சரக்கு அடிக்கும் டம்ளர் உடன் இருக்கும் புகைப்படத்தை தெரிந்தோ தெரியாமலோ வெங்கட் பிரபு வெளியிட்டு விட்டார்.

அதில் விஜய்க்கு ஏற்பட்ட அவமானத்தால் இப்போது வரை எந்த பார்ட்டிக்கும் அவர் போவதே இல்லை. அந்த அளவிற்கு வெங்கட் பிரபு தரமான சம்பவத்தை செய்து விட்டார். அடுத்ததாக விஜய் என் நண்பர் என்று பேச்சுக்கும் மூச்சுக்கும் போற இடத்தில் எல்லாம் உளறிக்கொண்டு பந்தா காட்டி வருகிறார் இவருடைய நண்பர் சஞ்சீவ்.

அது மட்டுமில்லாமல் அவரே மாறி நடிக்கிறேன் என்ற பெயரில் பல விஷயங்களை செய்து விஜய் பேரை டேமேஜ் செய்து இருக்கிறார். விஜய்க்கு எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் தான் அமைதியாக இருந்து வருகிறார்கள். ஆனால் சஞ்சீவ் மட்டும் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு சின்ன பிள்ளைத்தனமாக விஜய் போல் இமிட்டேட் பண்ணிட்டு வராரு.

அடுத்தபடியாக போக்கிரி படத்தின் போது விஜய்க்கும் நெப்போலினுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதை ஏற்கனவே பேட்டியில் ஒரு முறை கூறியிருக்கிறார். ஆனால் அதை அதோடு விடாமல் இப்போது வரை கொடுக்கிற பேட்டிகள் அனைத்திலும் தொடர்ந்து நெப்போலியன் குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே வருகிறார். அதாவது போக்கிரி சூட்டிங் நேரத்தில் விஜய்யை பார்ப்பதற்காக நெப்போலியன் சென்று இருக்கிறார்.

ஆனால் அவரை சந்திக்க விடாமல் நெப்போலியன் அவமானப்பட்டு இருக்கிறார். இந்த அவமானத்தை தற்போது வரை சொல்லிக் காட்டிக் கொண்டே வருகிறார். அடுத்தபடியாக தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் லியோ படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தைகள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி அவருடைய பெயருக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க லோகேஷ் தான் காரணம். ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகரை இந்த அளவுக்கு கெட்ட வார்த்தையை பேச வைத்து அவருடைய இமேஜை கெடுத்து இருக்கிறார்.