நாளை ரிலீசாகும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 4 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் டிரைவர் ஜமுனா

இதுவரை தமிழ் சினிமாவில் முதல் முதலாக நாளை மட்டும் ஒரே நாளில் கதாநாயகிகள் மையப்படுத்தி உருவாகியிருக்கும் 4 படங்கள் ஒட்டுமொத்தமாக ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகல படுத்தப் போகிறது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தை குறித்து பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஓ மை கோஸ்ட்: சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்திலும் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படம் டிசம்பர் 30ம் தேதியான நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் காமெடி திரைப்படம் ஆன இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படமாகவே அமைந்துள்ளது.

Also Read: இந்த வருட இறுதி வாரத்தில் வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்.. 60 வயது நடிகையுடன் மோதும் ராங்கி பிடித்த திரிஷா

டிரைவர் ஜமுனா: இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தனிக் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆகையால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. கதாநாயகியின் கதாபாத்திரம் வலுவாக பேசக்கூடிய இந்த படமும் டிசம்பர் 30 ஆம் தேதி ஆன நாளை தான் ரிலீஸ் ஆகிறது.

செம்பி: கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படமும் டிசம்பர் 30 ஆம் தேதி ஆன நாளை தான் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கோவை செல்லாவின் கதாபாத்திரம் தான் வலுவாக பேசப்படுமாம். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மேடைப் பேச்சால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. இப்போது கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு பேசுவதையே குறைத்துக் கொண்டார். அந்த வகையில் செம்பி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உதயநிதியால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த சிக்கல்.. எதுவுமே கிடைக்காததால் எடுத்த விபரீத முடிவு

ராங்கி: பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துள்ள திரிஷாவின் ராங்கி படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா செம போல்ட் ஆன கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்டானது. மேலும் இதில் இடம்பெற்றிருக்கும் பயங்கர சண்டை காட்சிகளில் எல்லாம் திரிஷா டூப் போடாமல் நடித்திருக்கிறாராம். ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பார்த்த திரிஷாவை வீர மங்கையாக பார்க்க நாளை ரிலீஸ் ஆகும் ராங்கி படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு இந்த 4 படங்களும் ஹீரோயின் கதாபாத்திரங்களை வலுவாக பேசக்கூடிய படங்களாகும். ஆகையால் டாப் ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் அதை எதிர்பார்ப்பில் தான் இந்த 4 படங்களும் ரிலீஸ் ஆகும் நாளைய தினத்தை குறித்து சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Also Read: சிவப்பு உடையில் செம ஸ்டைலிஷ் ஆன ராங்கி.. 39 வயதிலும் ஜொள்ளு விட்ட படக்குழு