லைக்கா லைன் அப்பில் இருக்கும் 4 மெகா பட்ஜெட் படங்கள்.. 500 கோடியை தாண்டி முடிவில்லாமல் கதற வைக்கும் சங்கர்!

4 mega budget films in the Lyca line up: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. 

சிறந்த திரைக்கதை, வெற்றி இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என எப்போதும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

லைக்கா கைவசம் வைத்திருக்கும் நான்கு மெகா பட்ஜெட் படங்கள் இதோ,

விடாமுயற்சி: மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் நடிக்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

விடாமுயற்சி படத்தின் ஓ டி டி உரிமை மட்டும் கிட்டத்தட்ட 150 கோடிக்கு விற்பனையாகியுள்ளது என்பது மகிழ்ச்சிகரமான தகவல்.

L2 எம்புரான்– மலையாள சினிமாவையே கதி கலங்க வைத்த அரசியல் கதை தான் பிரித்விராஜின் லூசிபர்.

மோகன்லால் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படத்தின் அடுத்த பாகம் பாகத்தை லைக்கா தயாரிக்கிறது.

பான் இந்தியா மூவியாக உருவாகும் எம்பிரான் என பெயரிடப்பட்ட லூசிபர் 2 வை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

வேட்டையன்: ஜெயிலரின் வெற்றிக்குப் பின் தன்னை அசைக்க முடியாத வசூல் மன்னனாக நிரூபித்த சூப்பர் ஸ்டார் அவர்கள் லைக்காவுடன் கைகோர்த்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

போலி என்கவுண்டருக்கு எதிரான சீர்திருத்தத்தை வலியுறுத்தும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் தலைவர்.

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதை அடுத்து வரும் தீபாவளியை ஒட்டி வேட்டையன் ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளது லைக்கா.

இந்தியன் 2:  உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பல வருடங்களுக்குப் பின்பு இதன் அடுத்த பாகத்திற்கு ரெடிஆகினர்.

லைக்கா தயாரிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை எதிர் கொண்ட தயாரிப்பு நிறுவனம்,

பலவித இடைஞ்சல்களால் பாதியிலேயே கிடப்பில் போட்டு மீண்டும் விடாமுயற்சியுடன் இந்தியன் 2 வை முடித்துள்ளனர்.

ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்தியன் 2

போஸ்ட் புரொடக்ஷன்  வேலைகள் நடைபெற்று வருகிறது. 350 கோடி பட்ஜெட் என ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2, இடையில் சற்று வேகம் எடுத்து 500 கோடி என ரவுண்டாக்கிவிட்டார் சங்கர்.

இந்தியன் 2 படத்தின் மூலமாக பல நிதி நெருக்கடிக்கு ஆளான லைக்கா 500 கோடி செலவை தாண்டிய போதும் படத்திற்கான  முடிவும் அதற்கான பலனும் வராமல் விழி பிதுங்கி நிற்கிறது.

இந்தியன் 2 க்கு மட்டுமே அச்சாரம் போட்ட இத்திரைப்படம் இந்தியன் 3யையும் முடித்துவிட்ட திருப்தியோடு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று  திட்டவட்டமாக கூறியுள்ளது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்