1000 கோடி வசூலை அசால்டாக குவித்த 4 இந்திய படங்கள்.. உண்மையான வசூல் ராஜா நீங்கதான்!

இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களில் 1000 கோடி வசூலை உலக அளவில் மிகக் குறைந்த நாட்களில் வசூல் செய்த பாக்ஸ் ஆபீஸில் பிடித்த முதல் 4 படங்கள் தற்போது சினிமா உலகத்தையே ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்த படங்கள் எத்தனை நாட்களில் அந்த ஆயிரம் கோடியை குவித்திருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

ஏனென்றால் இந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸான கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரசிகர்களின் மனதை சீக்கிரம் கவர்ந்ததுடன் பாக்ஸ் ஆபிஸில் வெறும் பதினைந்தே நாட்களில் 1000 கோடி வசூலை உலக அளவில் குவித்திருக்கிறது.

ஆனால் கேஜிஎப் சாப்டர் 2 படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மற்றொரு படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.  அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் கேஜிஎப் படத்தை மிஞ்சும் அளவுக்கு வெறும் ஒன்பதே நாட்களில் 1000 கோடி வசூலை உலக அளவில் குவித்த வசூல் சாதனை புரிந்திருக்கிறது.

இதைப்போன்று இந்த வருடம் மார்ச் 24ஆம் தேதி ரிலீசான எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் வெறும் 16 நாட்களிலேயே 1000 கோடி வசூலை உலக அளவில் வசூல் செய்திருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்தபடியாக 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 143 மூன்று நாட்களில் ஆயிரம் கோடி வசூலை உலக அளவில் வசூல் செய்திருக்கிறது. இந்த படம் 70 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு இதுவரை 2200 கோடி வசூல் செய்திருக்கிறது.

இவ்வாறு இந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் ஆயிரம் கோடி வசூலை அசால்டாக குவித்த படங்களில் இந்த நான்கு படங்கள் தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Next Story

- Advertisement -