விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்து பின் ஏங்கிய 4 நடிகைகள்.. வெறுத்த பின்னர் கல்யாணம் வரை சென்ற காதல்

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர். இதற்கு காரணம் இவர் நடித்த படங்கள் தான். சாதி மற்றும் அரசியல் படங்களை எந்த ஒரு பயமும் இல்லாமல் நடிக்கக் கூடியவர் தான் கேப்டன். மேலும் யதார்த்தமான குடும்ப ப் பின்னனை கொண்ட கதைகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகைகளும் அதிகம் கொண்டாடியவர் தான் விஜயகாந்த்.

விஜயகாந்த் முதன் முதலில் சினிமாவுக்கு வந்த புதிதில் அவருடைய முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் நிறம் போன்றவற்றால் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அதிலும் அப்போதைய நடிகைகள் எல்லாம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெற்றியை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். எனவே விஜயகாந்துடன் நடிக்கவே மாட்டோம் என ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் விஜயகாந்த் பெற்ற வெற்றியினால் இந்த நான்கு நடிகைகள் அவருடன் நடிப்பதற்கு ஏங்கிய சம்பவமும் உண்டு.

Also Read:வாழ்நாளில் விஜயகாந்த் நடித்த ஒரே ‘A’ சர்டிபிகேட் படம்.. வளர்த்த குருவிற்காக சம்மதித்த கேப்டன்

ராதிகா: 80 களின் காலகட்டத்தில் ரொம்பவும் எதார்த்தமான கதாநாயகியாக வெற்றி கண்டவர் தான் நடிகை ராதிகா. கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தார் இவர். விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த ராதிகா பின்னாளில் அவரோடு ஜோடி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் இருவரும் காதலித்து திருமணம் வரை சென்று நின்றது அந்த உறவு.

அம்பிகா: எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோக்களே இணைந்து நடிக்க ஆசைப்பட்ட நடிகை தான் அம்பிகா. வசீகரமான தோற்றத்தோடு, சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த அம்பிகா, அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தழுவாத கைகள் திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.

Also Read:வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

ராதா: அன்றைய சினிமாவில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா தான். இவரும் முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுத்து பின் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற ஹிட் படங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

சரிதா: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகை தான் சரிதா. சரிதா மற்ற நடிகைகளை போல இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றவர். முதலில் விஜயகாந்துடன் அடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சரிதா, அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

Also Read:விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்