புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தலைவர் 170 இல் கலக்கப்போகும் தைரியமான 4 நடிகைகள்.. ரஜினியுடன் சண்டை போட வரும் நடிகை

Rajini In 170 Movie: ரஜினி படம் என்றாலே சும்மா அதிரனும், தியேட்டர் ஸ்கிரீன் கிளியனும் அந்த அளவிற்கு தரமான படமாக இருக்கும். அந்த வகையில் வசூல் அளவிலும், அதிகமான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்து இப்பொழுது தான் ஜெயிலர் படத்தின் ஆட்டம் ஒரு வழியாக ஓய்ந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து ரஜினி நடிக்கப் போகும் 170 படத்திற்கான அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது சுட சுட தகவல்கள் வெளிவந்திருக்கிறது. அதாவது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி டிஜேபி கேரக்டரில் நாகர்கோவில் ஜில்லாவை கலக்கப்போகிறார். அத்துடன் இப்படத்தில் சிங்கப்பெண்களான நான்கு ஆர்டிஸ்ட்டுகள் களமிறங்கி இருக்கிறார்கள். அதில் நடிகை ஈஸ்வரி ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் வாங்கும் சம்பளம்.. விளம்பரத்துக்கே மிரள வைப்பவர் நண்பன்னா சும்மாவா.?

இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இரண்டாவது முறையாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அடுத்ததாக குத்து சண்டை வீராங்கனியாக இருந்த ஒருவரை சினிமாவிற்குள் இழுத்து, நடிகையாக பல படங்களின் மூலம் நமக்கு பரிச்சயமான ரித்திகா சிங், இவரும் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

அடுத்ததாக ஆரியா நடிப்பில் வெளிவந்த சர்ப்பட்ட பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன் இவரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இவரை தொடர்ந்து தனுஷ் மற்றும் அஜித் படங்களில் நடித்து வெற்றியைப் பார்த்த நடிகை மஞ்சு வாரியரும் ரஜினியுடன் நடிக்கப் போகிறார்.

Also read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி

இவர்களைத் தொடர்ந்து இப்படத்தின் வில்லனை தரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக பாகுபலி படத்தில் மிரட்டிய ராணா டகுபதியை படக்குழு கமிட் பண்ணி இருக்கிறது. இந்த தகவலை இப்படத்தில் தயாரிப்பாளர் லைக்கா ப்ரொடக்ஷனில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ரஜினியுடன் மோத போகும் ரானா டகுபதியின் வில்லத்தனம் எந்த அளவிற்கு அமையப்போகுது என்பதை நினைத்துப் பார்க்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.

அடுத்ததாக இப்படத்தில் பகத் பாஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் கண்டிப்பாக இப்படம் பான் இந்திய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்படத்திற்கும் வழக்கம் போல் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார். இப்படி தலைவர் அவருடைய 72 வது வயதிலும் மாஸ் காட்டி வருகிறார் என்பதுதான் இவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

Also read: கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு.. தம்மா துண்டு இருந்துட்டு விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்

- Advertisement -

Trending News