சூர்யாவை விட 3 வயது குறைவு.. அம்மாவாக நடிக்க வைத்த இயக்குனர்

பொதுவாக ஹீரோக்கள் கிட்டத்தட்ட 60, 70 வயதுகளை கடந்தும் ஹீரோவாக தான் படங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் ஹீரோயின்களுக்கு அப்படி இல்லை. சில வருடங்கள் மட்டுமே அவர்களால் கதாநாயகியாக நடிக்க முடிகிறது. அதன் பிறகு தன்னோடு ஜோடி போட்ட நடிகர்களுக்கு கூட அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இது இப்போது வந்ததல்ல, எம்ஜிஆர் சிவாஜி காலம் தொடங்கி இப்போது வரை அது நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஹீரோக்களை விட வயது குறைவாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு அம்மாவாக சில நடிகைகள் நடித்துள்ளனர். அவ்வாறு சூர்யாவை விட மூன்று வயது குறைவாக இருந்தும் ஒரு நடிகை அம்மாவாக நடித்துள்ளார்.

Also Read : விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. புது குண்டை போட்ட பிரபலம்

சூர்யா சினிமாவில் வாரிசு நடிகராக நுழைந்தாலும் ஆரம்பத்தில் சரியான படம் கிடைக்காமல் திணறினார். அப்போது அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் இயக்குனர் பாலா. அவ்வாறு இவருடைய இயக்கத்தில் வெளியான நந்தா படம் சூர்யாவை ரசிகர்களுக்கு வேறு விகிதமாக காட்டியது.

இந்த படத்திற்கு அவருக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை ராஜஸ்ரீ. இவர் கருத்தம்மா படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பாலாவின் முதல் படமான சேது படத்தில் மனநலம் குன்றியவராக சில காட்சிகளில் நடித்திருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Also Read : சாக்லேட் பாய்க்குள் ஒளிந்திருந்த வில்லன்.. ஒரு வருடத்திற்கு பிறகும் கொண்டாடப்படும் சூர்யா

அப்போது தான் பாலாவிடம் இருந்து மீண்டும் ராஜஸ்ரீக்கு அழைப்பு வந்தது. நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். முதலில் இதில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் இயக்குனர் பாலாவுக்காக ராஜஸ்ரீ ஒற்றுக்கொண்டார். மேலும் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பின்பு சில படங்களில் ராஜஸ்ரீ நடித்த நிலையில் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை தொடர்களில் ராஜஸ்ரீ நடிக்க ஆரம்பித்தார். மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்ரீ நந்தா படப்பிடிப்பில் நடந்த இந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Also Read : ஒருவேளை ஜப்பான் ஓடலனா.? தம்பியை கை பிடித்து தூக்கி விடும் சூர்யா.. 96 இயக்குனருடன் கூட்டணி

Next Story

- Advertisement -