விஜய் பிறந்தநாளன்று ரீ ரிலீசாகும் 3 படங்கள்.. கில்லி போல் வேர்ல்ட் வைடு வரும் மாஸ்டர் கிளாஸ் மூவி

Vijay Birthday Special Movies: ஜூன் 22 விஜய் தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் கட்சி ஆரம்பித்து கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இது. இந்நாளன்று விஜய் முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு வரும்படி உத்தரவு போட்டிருக்கிறார்.

விஜய் மட்டுமல்லாமல் திரையரங்குகளிலும் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக மூன்று தரமான படங்களை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஏற்கனவே உலகமெங்கும் விஜய்யின் படமான கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நிதி நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினத்திற்கு நல்ல வசூலை பெற்று தந்தது.

பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆனாலும்,புதுவரவாக கோட் படத்தின் அடுத்த சிங்களை வெங்கட் பிரபு அண்ட் கோ தளபதி பிறந்தநாளுக்கு வெளியிடுகிறார்கள். படத்தில் விஜய் பாடிய மற்றுமொரு பாடல் செகண்ட் சிங்கிளாக வெளிவர இருக்கிறது. ஏற்கனவே தளபதி முதலில் பாடி வெளிவந்த “விசில் போடு” பாட்டு ஹிட் அடித்துள்ளது.

இதுவரை ரீ ரிலீசில் விஜய்யின் கில்லி படத்தையும் சேர்த்து 5 படங்கள் பட்டையை கிளப்பியுள்ளது. ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய படங்கள், தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம் பார்த்துக் கொடுத்தது.

விண்ணை தாண்டி வருவாயா
மின்னலே
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி

இந்த பிறந்தநாளில் அதாவது ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் மூன்று படங்களை ரீ ரிலீஸுக்காக தயார் செய்து வருகிறார்கள்.

போக்கிரி
பகவதி
துப்பாக்கி

விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவர இருக்கிறது, கில்லி போல் துப்பாக்கி படம் வேர்ல்ட் வைட் ரிலீஸ் ஆகப்போகிறது.

இதுவரை ரீ ரிலீசான படங்களின் சில சம்பவங்கள்

- Advertisement -