வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அடுத்தடுத்து 3 உயிர்களை பறிகொடுத்த தமிழ் சினிமா.. அதிலும் அந்த முன்றாவது இறப்பு ரொம்ப கொடுமை!

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் 3 இறப்புகள் நடந்துள்ளது. இதனை சற்றும் தாங்க முடியாத ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  காதல் படத்தில் நடித்த விருச்சிககாந்த் வறுமை வாட்டி வதைத்தது பரிதாபமாக ஆட்டோவில் பிணமாக கிடந்த சம்பவம் ரசிகர்களை உருக்கி உள்ளது.

வெங்கடேஷ்: சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் தான் நடிகர் வெங்கடேஷ். இவர் சரவணன் மீனாட்சி, பாரதிகண்ணம்மா, ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

bharathi-kannanama-serial-venkatesh-1
bharathi-kannanama-serial-venkatesh-1

இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் பல்வேறு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தீப்பெட்டி கணேசன் : தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் தங்களுக்கான சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீப்பெட்டி கணேசன் என்கிற கார்த்திக். இவர் கிட்டத்தட்ட ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா மற்றும் கண்ணே கலைமானே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

theepetti ganesan karthik
theepetti ganesan karthik

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தீப்பெட்டி கணேசன் இன்று உடல்நிலை குறைவால் காலமானார். தற்போது இதனால் பல பிரபலங்களும் தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விருச்சிககாந்த்: காதல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி எப்படியாவது சினிமாவில் முன்னேறி விடலாம் என்ற கனவுடன் வந்தவர்தான் விருச்சிககாந்த். காதல் படத்தில் அவரது காட்சியே அனைவருக்கும் விருப்பமான காட்சியாக தான் இருக்கும்.

viruchikanth-kadhal-movie-actor
viruchikanth-kadhal-movie-actor

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்த விருச்சிககாந்த் சமீபத்தில் ஒரு பழைய ஆட்டோ ஒன்றில் பிணமாக கிடந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News