சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும் ரஜினி அண்மைக்காலமாக ரொம்பவும் பரபரப்பாக இருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் கைகோர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கூட இவர் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படி பிசியாக இருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் முக்கியமான ஒரு விஷயத்தை எதிர்பார்த்து வெறியோடு காத்திருக்கிறாராம். ஏனென்றால் ரஜினி கொஞ்சம் அமைதியாக இருந்தாலே ஏதாவது ஒரு சம்பவம் அவரை வைத்து நடந்து விடுகிறது. அதிலும் சமீப காலமாக அவருடைய சூப்பர் ஸ்டார் இடத்திற்கு ஏகப்பட்ட போட்டியும், சண்டையும் வருகிறது.

Also read: நடிகையுடன் ரகசிய திருமணம்.. இரவோடு இரவாக ரஜினியை கடத்தி செய்த விசாரணை

அது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் இடம் எங்களுக்குத் தான் என கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் ரஜினியை ரொம்பவும் மட்டம் தட்டி வருகிறது. ஏனென்றால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் தன்னுடைய சம்பளத்தை வெகுவாக குறைத்திருந்தார். அதிலிருந்தே சூப்பர் ஸ்டார் இனி பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ இல்லை என்ற ஒரு பேச்சு பூதாகரமாக கிளம்பியுள்ளது.

இதெல்லாம் ரஜினியின் காதுக்கு சென்றாலும் கூட அவர் சில விஷயங்களை மனதில் வைத்து மௌனம் காத்து வந்தார். ஆனால் இப்போது அவர் வெறிகொண்ட வேங்கையாக பாய்வதற்கு தயாராக இருக்கிறாராம். அதனாலேயே பல நடிகர்களின் சாய்ஸாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு ரஜினி வலை விரித்துள்ளார்.

இதன் மூலம் தன்னை பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் லோகேஷ், ரஜினி கூட்டணிக்கு பின்னால் மூன்று முக்கிய காரணங்களும் இருக்கிறது. அதாவது கைநழுவிப்போன பாக்ஸ் ஆபிஸை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்று ரஜினி முடிவு செய்திருக்கிறார்.

Also read: ரஜினி படத்தை தயாரிக்க போட்டிப் போடும் முதலாளிகள்… எவ்வளவு வேணாலும் சம்பளம் தர நாங்க ரெடி என்கிட்ட கொடுங்க!

இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைக்க வேண்டும். அதற்காக யாரும் போட்டி போட கூடாது. இதையடுத்து மூன்றாவதாக 150 கோடி வரை சம்பளம் வாங்க வேண்டும் என்றும் பிளான் செய்துள்ளார். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அதற்கு லோகேஷ் மாதிரியான ஒரு இயக்குனர் வேண்டும். அதனால்தான் அவர் தற்போது வெறிபிடித்து களத்தில் காத்துக் கொண்டிருக்கிறாராம்.

தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், ரஜினி படத்தை இயக்குவதற்கு இப்போது வரை யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் எப்படியும் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் தரமான ஒரு வெற்றியின் மூலம் தன் பெயரை நிலைநாட்டி விட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறார்.

Also read: எண்டு கார்டு போடறதுக்குள்ள ஒரு பிரம்மாண்ட வெற்றி கன்பார்ம் .. ரஜினி போடும் பலே திட்டம்

- Advertisement -

Trending News