லோகேஷ், தளபதி கூட்டணியை பார்த்து பயந்த 3 ஹீரோக்கள்.. இயக்குனர்களை கழட்டிவிட்ட பரிதாபம்

தற்போது இணையத்தையே தெறிக்கவிடும் சம்பவம் என்னவென்றால் தளபதி 67 படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான். வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே விஜய் மற்றும் லோகேஷ் இணைவது உறுதியாகிவிட்டது. ஆனால் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்தப் படத்துடன் மோத வேண்டும் என்றால் கண்டிப்பாக மற்ற ஹீரோக்கள் அச்சத்தில் இருப்பார்கள். இதனால் ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதியான கூட்டணியில் இருந்து ஹீரோக்கள் பின்வாங்கியுள்ளனர்.

Also Read : சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

அந்த வகையில் சூர்யா, பாலா கூட்டணியில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் மீது சூர்யாவுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா மற்றும் அவரது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனமும் விலகி விட்டது. மேலும் தளபதி 67 படத்துடன் மோத சூர்யா 42 படம் தயாராகி வருகிறது.

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இணைந்துள்ள இந்த படம் 3டி அனிமேஷனில் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி, சிபி சக்கரவர்த்தி, லைக்கா கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரஜினி சிபி சக்கரவர்த்தியை டீலில் விட்டதாக கூறப்படுகிறது.

Also Read : சூர்யா 42 பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்.. இளசுகளை கண்டமாக்கிய குடும்ப குத்துவிளக்கு

இவருக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்ய இருக்கிறாராம். மேலும் தளபதி 67 படத்திற்கு இணையாக மாஸ் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அஜித். ஆகையால் விக்னேஷ் சிவன் படத்தில் நடித்தால் லோகேஷ்க்கு இணையாக படம் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஆகையால் விக்னேஷ் சிவனை ஏகே 62 படத்தில் இருந்து தூக்கி விட்டு மகிழ் திருமேனியை லைக்கா நிறுவனம் லாக் செய்துள்ளது. ஏனென்றால் அருண் விஜய்க்கு தரமான ஆக்சன் படங்களை மகிழ் திருமேனி கொடுத்துள்ளார். அதுவும் அஜித்துக்கு என்றால் வேற லெவல் சம்பவம் செய்வார். இவ்வாறு தளபதி 67 கூட்டணியை பார்த்து பயந்து ரஜினி, சூர்யா, அஜித் இருவரும் தங்களது ஹீரோக்களை மாற்றி உள்ளார்கள்.

Also Read : கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்