ஒரு வழியா கவினுக்கு பிறந்த நல்ல காலம்.. வெற்றிமாறன் சொன்ன 3 குட் நியூஸ்

Kavin’s Next film: லிப்ட், டாடா, ஸ்டார் எனப்பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இளம் நடிகர் கவினை வளைத்துப் போட்டார் கமலஹாசன். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில், கவின் ஒரு படம் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் சிம்புவின் எஸ் டி ஆர் 48 படத்துக்கே இன்னும் ஒரு முடிவு கிடைக்கவில்லை.

கமலை பெரிதும் நம்பிக் கொண்டு இருந்தார் கவின். ஆனால் சிம்பு படம் போல் கவினுக்கும், கமல் அல்வா கொடுத்து விட்டார். இனிமேலும் கமலை நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என அடுத்தடுத்த படத்தை தேடி சென்று விட்டார் கவின். இப்பொழுது அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசி உள்ளது.

விடுதலை படம் இரண்டாம் பாகத்தில் கடும் பிஸியாக இருந்த வெற்றிமாறன் ஷூட்டிங்கை முடித்து பூசணிக்காய் உடைக்கும் நாள் பார்த்துவிட்டார். தேனி மலைப்பகுதியில் நடைபெற்ற சூட்டிங் ஸ்பாட் அப்படியே சென்னையில் செட்டாக அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதை முடித்த கையோடு கவின் படத்துக்கு வருகிறார் வெற்றிமாறன்

வெற்றிமாறன் சொன்ன 3 குட் நியூஸ்

வெற்றிமாறன் இன்னும் ஒரு நல்ல செய்தியாக வாடிவாசல் படத்தையும் அக்டோபர் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கவிருக்கிறாராம். அதற்காக சூர்யாவிடம் பேச்சுவார்த்தை முடிந்தது. இந்த படத்திற்காக சூர்யா ஆறு மாதம் டைம் கொடுத்து இருக்கிறார். 2025 பொங்கல் வெளியீடாகவும் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விடுதலை இரண்டாம் பாகம் முடிவு, கவினை வைத்து இயக்கும் “மாஸ்க்”படம், நின்னு போன சூர்யாவின் வாடிவாசல் படம் என மூன்று நல்ல செய்திகள் வெற்றிமாறன் தரப்பிலிருந்து கிடைத்துள்ளது. கவினின் “மாஸ்க்” படம் குரோம்பேட்டையில் மிக பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தில் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாம்

Next Story

- Advertisement -