முன்று தலைமுறையாக நடித்து வரும் பிரபலங்கள்.. சினிமாவை புரட்டி போட்ட 9 வாரிசு நடிகர்கள்

இந்திய சினிமாவை பொருத்தவரை பல நடிகர்களின் வாரிசுகள் தான் தற்போது வரை சினிமாவில் நிலைத்து நின்று நடித்து வருகின்றனர். காலம் காலமாக சினிமா என்பது தற்போது இவர்களுக்கு எல்லாம் ஒரு வியாபார யுத்தியாக மாறிவிட்டது.

எத்தனை திறமையுள்ள புதுமுக நடிகர்கள் வந்தாலும் சினிமாவை பொறுத்தவரை அதிகப்படியான வாய்ப்புகள் செல்வது வாரிசு நடிகர்களுக்கு மட்டும் தான். ஏனென்றால் இவர்களுக்கான அடையாளம் ஏற்கனவே சினிமாவில் உள்ளதால் விளம்பரம் தேவையில்லை என்பதால் வாரிசு நடிகர்களுக்கு பல இயக்குனர்களும் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது 9 வாரிசு நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

சிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிப்பு நாயகனாக இருந்தவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பிற்கு என்று இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர். அவரது மகனான பிரபு தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். இவரது மகனான விக்ரம் பிரபுவும் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார்.

sivaji-prabhu-cinemapettai
sivaji-prabhu-cinemapettai

முத்துராமன்: தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி இணையாக பல ரசிகர்கள் வைத்திருந்தவர் முத்துராமன். இவரது படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர். இவரது மகனான கார்த்திக் தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு இணையாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவரது மகனான கவுதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நாகேஷ்: தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் காமெடியின் நாயகனாக திகழ்ந்தவர் நாகேஷ். அதன்பிறகு ஆனந்தபாபு தனக்கென ஒரு சில படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது அவரது மகனான காஜேஷ் சந்தானம் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ராஜபாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

nagesh
nagesh

முரளி: முரளியின் அப்பா சித்தலிங்கையா கன்னட சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழில் முரளியை வைத்து புதிர் எனும் படத்தை இயக்கினார். தற்போது இவரது மகனான அதர்வாவும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார்.

விக்ரம்: விக்ரமின் அப்பாவான வினோத் ராஜ் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் படைத்தார். தற்போது அவரது மகனான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நுழைந்து ஒரு படம் நடித்து அடுத்ததாக மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

தன்யா: ரவிச்சந்திரன் பல படங்கள் நடித்துள்ளார். அவரது மகனான ஹம்சவர்தன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் நடித்தார்.

லட்சுமி: குமரி ருக்மணி மகளான லட்சுமி ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு கிருஷ்ணவேணி பாட்டியாக நடித்து இருப்பார். தற்போது இவரது மகளான ஐஸ்வர்யாவும் கடைசியாக சாமி2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

உமா ரியாஸ்: கமலா காமேஷ் 480 படங்கள் நடித்துள்ளார். அவரது மகளான உமா ரியாஸ் கடைசியாக சாமி 2 மற்றும் அவதார பேட்டை படத்தில் நடித்துள்ளார். இவரது மகனான ஷாரிக் ஹாசன் பென்சில் படத்தின் மூலம் வில்லனாக நடித்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவுக்கு பிரபலமானார்.

அர்ஜுன்: சக்தி பிரசாந்த் ஒரு கன்னட நடிகர். அவரது மகன் தான் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். அவரது மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -