வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் விரைவாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட ரஜினியின் இரண்டு படங்களின் சாதனையை தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மூன்றே நாட்களில் முறியடித்துள்ளது.

கபாலி: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கிய இந்தப் படம் என்னதான் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், தோல்விப்படம் என ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்த படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்ற ஒரே காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரது படத்தை வேற லெவலுக்கு ஹிட் கொடுத்தனர்.

இந்தப் படமும் சில நாட்களிலேயே 200 கோடியை தாண்டியது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது. கபாலி படத்திற்கு ஒட்டுமொத்தமாக 1000 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலானது என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உடைத்துக் கூறினார்.

Also Read: வந்தியத்தேவன் மீது வழக்கு பதிந்த வழக்கறிஞர்.. என்னப்பா இது மணிரத்னத்திற்கு வந்த சோதனை

2.0: ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்த படத்தின் 2ம் பாகமாக வெளியான 2.0 திரைப்படம் 500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே 200 கோடியை தொட்டது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 800 கோடி வசூலை வாரி குவித்தது.

பொன்னியின் செல்வன்: உலக அளவில் பான் இந்தியத் திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களில் 230 கோடியை பாக்ஸ் ஆபீஸில் குவித்திருக்கிறது. இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே ரசிகர்களிடம் எழுவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் அலைமோதுகிறது.

Also Read: 20 வருடம் கழித்து மணிரத்னத்துடன் இணைந்துள்ள ஜாம்பவான்.. கூடவே இருந்தும் நடிக்காத 80ஸ் ஹீரோயின்

மேலும் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இளையோருக்கு அதிகமாக இருப்பதால் இந்த படத்திற்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் ஒருசில வாரத்திலேயே அசால்டாக 1000 கோடியைத் தாண்டி பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்க போகிறது.

அதேபோல் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தற்போது பொன்னியின் செல்வன் படம் பயங்கர டஃப்  கொடுத்திருக்கிறது. ஆகையால் ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ஜெயிலர் படம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்கள்.. வந்தியத்தேவனுக்கு டஃப் கொடுத்த 3 நடிகைகள்

Next Story

- Advertisement -