ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர்.. ஒரே ஒரு நடிகருக்கு 3 படம் 500 நாட்கள் திரையரங்களில் ஓடியது

Actor Rajini and Kamal: தற்போதைய காலகட்டத்தில் விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு எக்கச்சக்கமான படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே என்னமோ அந்த படங்கள் வந்து கொஞ்ச நாட்கள் மட்டுமே ஓடும் நிலைமை ஆகிவிட்டது.

ஆனால் முன்னாடி எல்லாம் இப்படி இருக்காது. ஏதாவது ஒரு படம் வெளி வந்தால் அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் அந்த படம் மாதக்கணக்கில் ஓடி லாபத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.

Also read: ரீ ரிலீஸ் செய்தால் இன்றும் உட்கார வைக்கும் ரஜினியின் 5 படங்கள்.. பெயர் சொல்லும் படமாய் மாறிய பில்லா

அந்த வகையில் ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் 500 நாட்களைக் கடந்து ஓடி இருக்கிறது. இது ரொம்பவே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். ஏனென்றால் அப்போது இருந்த ரஜினி, கமல் படங்கள் கூட இந்த அளவுக்கு ஓடவில்லை.

இந்த நடிகர் தான் ரஜினி, கமலுக்கே மிகப்பெரிய டஃப் கொடுத்தவர். அவர் வேறு யாருமில்லை நம்முடைய மைக் மோகன் தான். இவர் நடிப்பில் வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை, விதி, நெஞ்சத்தை கிள்ளாதே இப்படங்கள் அனைத்தும் காதலை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும்.

Also read: அவர் போட்ட விதை விருட்சமா வளந்து நிக்குது.. இன்று ரிலீசான 7 படங்களை ஓரம்கட்டி கெத்து காட்டிய கமல்

அதிலும் இவருடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் சோகமான பார்வை இது அனைத்துமே ரசிகர்களை ஈர்த்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் 800 நாட்கள் மற்றும் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி 850 நாட்கள் என்று ஓடின.

ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏதோ அத்தி பூத்தாற்போல் ஒரு படம்தான் சொல்லும்படியாக அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. ஏன் சிவாஜி, எம்ஜிஆர், கமல் இவர்களெல்லாம் இந்த லிஸ்டிலேயே இடம் பெறவில்லை என்றே சொல்லலாம். மோகன் மட்டுமே நடித்த மூன்று படங்கள் 500 நாட்கள் திரை அரங்கில் ஓடி தமிழ் சினிமாவில் யாரும் செய்யாததை செய்த நடிகராக சாதனை படைத்திருக்கிறார்.

Also read: அட மைக் மோகன் இவ்வளவு ரெக்கார்டு வச்சிருக்கிறாரா.? காலை முதல் இரவு வரை தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்