பயில்வான் மேல் காதலில் விழுந்த 3 நடிகைகள்.. திருமணத்திற்காக கெஞ்சிய சேச்சியின் பல வருட சீக்ரெட்

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் முதல் புதுமுக நடிகைகள் வரை அனைவரின் அந்தரங்கத்தை பற்றியும் விமர்சித்து வரும் பயில்வனை பற்றிய பல வருட சீக்ரெட் தற்போது கசிந்துள்ளது. இதை அவரே வெளிப்படையாக கூறியிருப்பது தான் ஆச்சரியம். அதிலும் அவருடைய காதல் ரகசியத்தை பற்றி கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் இவர் ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னை மூன்று நடிகைகள் காதலித்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடிகைகள் யார் என்ற விபரத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் அந்த மூன்று நடிகைகளும் இவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு தீவிரமாக காதலித்திருக்கிறார்கள்.

Also read: சரமாரியாக விட்டு விளாசிய ஷகிலா.. விஷத்தை கக்க முடியாமல் பல்லு புடுங்கிய பாம்பான பயில்வான்

ஆனால் பயில்வான் அவர்களின் காதலை ஏற்கவே இல்லையாம். ஏனென்றால் அவருடைய குடும்பம் ரொம்பவும் ஆச்சாரமான குடும்பமாம். இது போன்ற காதல் கத்திரிக்காய்க்கெல்லாம் அவர் வீட்டில் இடம் கிடையாதாம். அதனாலேயே தனக்கு வந்த இந்த காதல் விண்ணப்பங்களை அவர் நிராகரித்திருக்கிறார்.

மேலும் அவர் மற்றொரு ரகசியத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். அதாவது நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் காமெடி நடிகை ஒருவர் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாராம். ஆனால் பயில்வான் அவருடைய காதலையும் ஏற்க மறுத்திருக்கிறார்.

Also read: சைக்கோ தயாரிப்பாளரிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகை.. தாங்க முடியாமல் தப்பித்து வந்த பரிதாபம்

அப்படி இருந்தும் அந்த நடிகை இவரிடம் பலமுறை அது குறித்து பேசியதாக பயில்வான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த நடிகை தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர் அந்த நடிகையின் பெயரையும் கூறவில்லை. இருப்பினும் அவர் கொடுத்த குறிப்பை வைத்து அந்த நடிகை யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடிகிறது.

அந்த வகையில் கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் நடித்த ஷர்மிலி தான் அந்த நடிகை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரீட்சையமானவர். அது மட்டுமல்லாமல் இவரை காரணமாக வைத்து கவுண்டமணி ஒரு முறை பயில்வானிடம் சண்டையிட்டார் என ஒரு தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பயில்வான் சேச்சி பற்றி கூறியிருக்கும் இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: கர்ப்பமான பின் கல்யாணம் செய்துகொள்வது புது ட்ரெண்ட்.. நட்சத்திர தம்பதியர்களின் திடீர் திருமணம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்