6 மாசத்துல ரிலீஸ் ஆன படங்களில் உருப்படியான 6 படங்கள்.. ரசிகர்களை வச்சு செஞ்ச பெரிய ஹீரோக்கள்

Best 6 movies in 2024: கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நல்ல நல்ல படங்கள் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமாவை இன்னும் ஒரு படி மேலே ஏற்றி வைத்தது. பெரிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றது, சின்ன பட்ஜெட் படங்கள் ஹிமாலய வெற்றி பெற்றது.

ஆனால் இந்த ஆண்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் என்று சொல்ல வேண்டும். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்கள் என்று எதுவுமே கிடையாது. பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவர்களுடைய ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

2024 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அதில் நல்ல படங்கள் என்று இந்த ஏழு படங்களை தான் சொல்லலாம்.

மஞ்சும்மல் பாய்ஸ் & பிரேமலு: தமிழ் சினிமா படங்கள் செய்யாத பெரிய வசூல் சாதனையை முதன் முதலில் செய்த படங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு. இந்த படங்கள் தான் கூட்டம் கூட்டமாக ரசிகர்களை தியேட்டருக்குள் உட்கார வைத்தது. என்னதான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் இது மலையாளத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படங்கள் தான்.

கருடன்: சூரி நடிப்பில் வெளியான கருடன் படம் தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. வருஷம் தொடங்கி ஆறு மாதத்தில் முதன்முதலில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பர் ஹிட் அடித்த படம் இதுதான். இந்த வருடத்தின் முக்கியமான இடத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் மொத்த நல்ல படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக இந்த படத்திற்கு இடம் இருக்கும்.

மகாராஜா: கருடன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ரிலீசான தரமான படம் என்றால் அது மகாராஜா தான். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக ரிலீஸ் ஆன இந்த படம் பலதர மக்களால் கொண்டாடப்பட்டது. மேலும் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறது.

லவ்வர்: குட் நைட் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் தான் லவ்வர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இல்லை என்றாலும் இளைஞர்களால் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இந்த வருடம் வந்த படங்களின் லிஸ்ட்டோடு ஒப்பிடும்போது இந்த படம் நல்ல கதையோடு வெளியாகி இருக்கிறது.

அரண்மனை 4: வழக்கமான தன்னுடைய கிளாமர் பேய்களுடன் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்தார். வழக்கம்போல குழந்தைகள் கொண்டாடும் பேய் படமாக இருந்ததால் இந்த படம் வசூலில் தலை நிமிர்ந்து நின்றது.

வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளியான இந்த படம் ஒரு நல்ல ஃபீல் குட் கொடுத்தது. படத்தில் பெருசாக சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள தான் வேண்டும். இருந்தாலும் ஒருமுறை பார்த்து வயிறு குலுங்கி சிரிக்கும் அளவுக்கு இந்த படம் இருந்தது.

Next Story

- Advertisement -