குடி குடியை கெடுக்கும், டாஸ்மார்க் கடையில் 20% சரிவு.. கேவலமான மீட்டிங் வச்சு லெஃப்ட் & ரைட் வாங்கிய பெண் மேலாளர்

20% decline in Tasmac store: மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று எத்தனையோ பேர் சொன்னாலும் குடிப்பவர்கள் காதில் இது எதுவும் கேட்காது. மது இருந்தால் மதியை மறக்கடித்து விடும் என்று சொல்வதற்கு ஏற்ப குடிப்பவர்களுக்கு இதுதான் அமிர்தமான மருந்து என்று நினைக்கும் அளவிற்கு குடியை குடித்துவிட்டு அவர்கள் மட்டுமல்லாமல் அந்த பாதிப்பு குடும்பங்களிலும் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.

இதை தடுப்பதற்கு எந்த ஒரு சட்டமும் முன்வரவில்லை என்று பலரும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் வாக்கு கேட்கும் பொழுது ஒவ்வொரு கட்சியினரும் நாங்கள் ஆட்சியைப் பிடித்து விட்டால் முதலில் மதுவைதான் ஒழிப்போம். அந்த வகையில் டாஸ்மார்க் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இல்லாமல் ஆக்கிடுவோம் என்று பல வாக்குறுதிகளை கொடுத்திருப்பார்கள்.

மதியை மறக்கடிக்கும் மதுவிற்கு கூஜா தூக்கும் மேலாளர்

ஆனால் அவர்கள் கொடுத்த வாக்கு கட்சிக்கு வந்த பிறகு காத்தோடு பறந்து போய்விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப இந்த டாஸ்மார்க் கடை மூலம் எந்த அளவிற்கு லாபத்தை பார்க்க முடியுமோ அதை தான் முக்கியமாக கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தற்போது டாஸ்மார்க் கடையிலிருந்து வரும் லாபத்தில் 20% சரிவு ஏற்பட்டிருப்பது அங்கு இருக்கும் மண்டல மேலாளராக இருக்கும் பெண் ஊழியர் நர்மதா என்பவர் மண்டல வாரியாக டாஸ்மார்க் கடையை நடத்தும் மேலாளர்களுக்கு ஒரு மீட்டிங் போட்டு இருக்கிறார்.

அதாவது டாஸ்மார்க் கடைகளில் 20% அளவிற்கு மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன என்று சேலம் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களிடம் முதல்நிலை மண்டல மேலாளர் நர்மதா கேள்வி கேட்டிருக்கிறார். ஒருவேளை கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருப்பதால் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் வராமல் போயிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

தெரிந்தும் தெரிவிக்காமல் இருந்தால் கூட கள்ளச்சாராயத்தை பற்றி கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நர்மதா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இவர்களுடைய நோக்கம் என்னவென்றால் யாரு எப்படி வேணாலும் போங்க. உங்களால் எங்களுக்கு வரக்கூடிய இந்த பெரிய லாபத்தை குறைத்து விட்டால் எங்களுடைய ஆட்டம் கழண்டு விடும்.

மக்கள் விழிப்புணர்வுடன் மதுவை மறந்து விட்டார்கள் என்பதை எடுத்துக் கொள்ளாமல் ஏன் டாஸ்மார்க் கடைக்கு அவர்கள் வரவில்லை என்று கேள்வி எழுப்பி கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார் மண்டல மேலாளர் நர்மதா. இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை டாஸ்மார்க் கடைகளும் மூடப்படுவதில்லை மதுவும் குறைவதில்லை குடித்து குட்டிச்சுவராக போகும் மக்களும் திருந்தப் போவதில்லை. திருடன் கையிலேயே சாவி கொடுத்தால் இது தான் கெதி.

தமிழ்நாட்டில் நடந்த சமீபத்திய பிரச்சினைகள்

Next Story

- Advertisement -