ஆரம்பத்தில் விஜய் போல் அவமானப்படுத்தப்பட்ட 2 ஹீரோக்கள்.. அனுமார் மூஞ்சு என கிண்டலடிக்கப்பட்ட பான் இந்தியா ஹீரோ

Thalapathy Vijay: உளியோட வலியை தாங்குற கல்லு தான் கோயிலில் சிலையாகும். இந்த வசனம் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பிரபலமானது. செய்தியை படிக்கிற 90ஸ் கிட்ஸ்களுக்கு டக்கென சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் கண்ணு முன்னாடி வந்துட்டு போவாரு.

இது என்ன இந்த டயலாக் இவ்வளவு கிரிஞ்சா இருக்கு என கிண்டல் அடிக்க கூட தோணும். ஆனா நமக்கு தேவையான நல்ல மெசேஜ் கூட இதுல இருக்கு. இந்த மோட்டிவேஷன் வசனம் எங்கு செட்டாகுதோ இல்லையோ சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு செட் ஆகும்.

வீட்ல இருக்குற கண்ணாடி முன்னாடியும், பெரிய பெரிய கேமராவை வைத்து எடுக்கும் புகைப்படங்களிலும் நம் கண்ணுக்கு நாமே அழகாக தெரிவோம். ஆனால் ஒரு பெரிய ஸ்கிரீனில் நம்மை பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் கூச்சமாக இருக்கும்.

அந்த கூச்சத்தை தூக்கி போட்டால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிக்க வந்த எல்லோருக்குமே சினிமா சிவப்பு கம்பளம் தான் விரிக்கும் என்றால் அது பெரிய பொய். பல கல்லடிகளை தாங்கிய பிறகு தான் சினிமாவில் ஜெயிக்க முடியும்.

ஆசியா அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ரஜினி முதல் மூன்று இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் முதன் முதலில் அவரை திரையில் பார்க்கும் பொழுது கழுவி ஊற்றாத ஆட்களே இல்லை.

இதெல்லாம் ஒரு மூஞ்சியா, இவங்க எல்லாம் ஏன் நடிக்க வராங்கன்னு நிறைய பேசப்பட்டது. இன்னைக்கு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸின் கிங்மேக்கராக இருப்பவர் தான் தளபதி விஜய். இன்றைய தேதிப்படி அவரை வச்சு படம் பண்ண நான், நீ என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி 69 படத்தை யார் தயாரிப்பது என்று பெரிய போர்க்களமே தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கிறது. ஆனால் அப்படியே ஃபிளாஷ்பேக் போய் பார்த்தால் விஜய் சந்தித்த அவமானங்கள் நிறைய.

விஜய் உடைய அப்பா சந்திரசேகர் தன் மகனின் புகைப்பட ஆல்பங்களை எடுத்துக் கொண்டு ஏறாத ப்ரொடக்சன் கம்பெனிகளே இல்லை. ஹீரோ ஆவதற்கு இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பிரபல நாளிதழ் விஜய்க்கு விமர்சனம் கொடுக்கும் அளவுக்கு தான் இருந்தது.

விஜய் மாதிரியே ஆரம்ப காலகட்டத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து இப்போது பெரிய அளவில் வெற்றி பெற்ற ரெண்டு ஹீரோக்களும் இருக்கிறார்கள். மலையாள சினிமாவில் பேரும் புகழும் பெற்ற இயக்குனர் பாசிலின் மகன் தான் பகத் பாஸில்.

ஆனால் அவர் சினிமாவுக்கு வந்த போது அத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் அவர் மீது விழுந்தது. ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி கூட போனார். அதன் பின்னர் எப்படியும் சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற போட்ட உழைப்பு தான் இன்று அவரை உச்சத்தில் கொண்டு சென்று இருக்கிறது.

நஸ்ரியா உடன் ஆன திருமணத்தால் பகத் பாஸில் சந்திக்காத அவமானங்களே இல்லை. வயது வித்தியாசத்தில் இருந்து உடல் தோற்றம் வரை அத்தனையும் விமர்சிக்கப்பட்டது. அத்தனையையும் தன்னுடைய நடிப்பின் மூலம் மாற்றிக் காட்டினார் இந்த மாமன்னன்.

அதேபோன்று தெலுங்கு சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து வந்தவர் தான் அல்லு அர்ஜுன். இப்போது இருக்கும் தோற்றம் போல் இல்லாமல் அப்போது மெல்லிய உடல் தேகம், இளம் வயதாக இருப்பார். இவர் எல்லாம் ஹீரோவா, அனுமார் மூஞ்சி மாதிரி இருக்கு என அவர் மீது விமர்சனம் விழுந்தது.

அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் எப்படியும் பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என உழைக்க ஆரம்பித்தார். இன்று புஷ்பா படத்தின் மூலம் உலக சினிமா அளவில் டிரண்டாகிவிட்டார்.

இவர்கள் மட்டும் இல்லை இந்திய சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருக்கும் நிறைய ஹீரோக்கள் பலவிதமான அவமானங்களை சந்தித்து மேலே வந்தவர்கள் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்