வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கல்யாணத்துக்கு முன் ஐஸ்வர்யா காதலித்த 2 பேர்.. கொளுத்தி போட்ட பயில்வான்

ஒரு நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் யூடியூப் சேனல்களால் தான் பயில்வான் ரங்கநாதன் அதிக பிரபலம் அடைந்தார். திரை பிரபலங்களின் சீக்ரெட் வாழ்க்கையை பற்றி கூறுவது, நடிகைகளின் அந்தரங்க ரகசியங்களை அம்பலப்படுத்துவது என இவர் ஒரு தனி ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றிய ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு இருக்கிறார். அதாவது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த வருடம் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட இவர்கள் இருவரும் தற்போது தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Also read: கொஞ்சம் தலைவருக்கு ரெஸ்ட் குடுங்க ஐயா.. ஜெயிலர் முடிந்தவுடன் தலைவர் கையில் எடுத்த புது அவதாரம்

ஆனாலும் இவர்களைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தி மீடியாவில் வெளிவந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பயில்வான், தனுசை திருமணம் செய்வதற்கு முன்பாக ஐஸ்வர்யா இரண்டு பேரை காதலித்ததாக கூறியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யா, சிம்புவை காதலித்த விஷயம் பலருக்கும் தெரியும்.

தனுஷ் திருமணத்தின் போது இது சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் பயில்வான் தற்போது ஐஸ்வர்யாவின் மற்றொரு காதல் பற்றியும் கூறி இருக்கிறார். அதாவது அவர் ஒரு தொழிலதிபரின் மகனை காதலித்தார் என்றும் ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

Also read: முதல் காதலை நினைத்து உருகும் செல்வராகவன்.. தனுஷை தொடர்ந்து நடக்க போகும் விவாகரத்து

இது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த விஷயம் பற்றி இதுவரை எந்த மீடியாவிலும் வெளிவந்தது கிடையாது. அதை தற்போது பகிரங்கமாக கூறியிருக்கும் பயில்வான் ஐஸ்வர்யாவுக்கு இப்படி சில காதல்கள் இருந்தாலும் தனுஷை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்.

இப்போது அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தாலும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் தனுசுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் ஒருவர் இப்போதும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என பயில்வானிடம் கூறினாராம். அதனாலேயே அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று அவர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

Also read: 100 கோடியில் தியேட்டர் கட்டும் பிரபல தயாரிப்பாளர்.. அடுத்து ரஜினியை வைத்து பிரம்மாண்டம் படம் எடுக்க முடிவு.!

- Advertisement -

Trending News