ரஜினிக்கு வாழ்த்து கூற வராத 2 முக்கிய நபர்.. ஒருவேளை அழைப்பு இல்லையோ!

கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கோலாகலமாக கொண்டாடினர். அத்துடன் ரஜினியின் குடும்பத்தினர் அவருக்கு கேக் வெட்டி, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பின் வைரலானது. இந்த புகைப்படத்தில் அவருடைய மனைவி, மகள்கள், பேரன்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த இரண்டு நபர்கள் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கஸ்தூரி ராஜா தனுஷுக்கு அப்பா மட்டுமல்லாமல் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தவர்.

இவர் ரஜினியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாததால் ரஜினிக்கும் கஸ்தூரிராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இவரைத் தொடர்ந்து ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றொரு நபர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன்.

சௌந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அதன் பிறகு விவாகரத்து பெற்று விட்டார். அதன் பிறகு அமெரிக்காவில் எம்பிஏ முடித்த தொழிலதிபர் விசாகன் என்பவரை சௌந்தர்யா கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விசாகனுக்கும் பத்திரிக்கை துறையை சேர்ந்த கனிகா குமாரனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பிறகு கனிகா, சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனை மறுமணம் செய்த பிறகு, விசாகன் சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார்.

இன்னிலையில் தற்போது விசாகன், அவருடைய மாமனாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வராமல் இருந்தது ரஜினிக்கும் விசாகனுக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்திருக்குமோ? என்ற சந்தேகம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தோன்றியுள்ளது. அத்துடன் உள்ளூரிலேயே இருக்கும் விசாகன் மற்றும் கஸ்தூரிராஜா இருவரும் பிறந்தநாள் விழாவிற்கு ஒருவேளை அவர்களுக்கு அழைப்பு வராமலும் இருந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை