வாய்ப்பு இல்லாமல் பலான வெப் தொடர் பக்கம் போன 2 பேர்.. பெட்ரூம் சீனில் எல்லை மீறும் டேனியல் பாலாஜி

Daniel Balaji: சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் பிரபலங்கள் வெப் தொடர் பக்கம் சென்று வருகிறார்கள். ஏனென்றால் இப்போது நிறைய ஓடிடி நிறுவனங்கள் தலைதூக்கி உள்ளதால் ரசிகர்கள் அதிகம் வெப் தொடர் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டி வந்த டேனியல் பாலாஜிக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருக்கிறது.

இதனால் டேனியல் பாலாஜி வெப் தொடர் பக்கம் சென்று விட்டார். ஜீ5 ஓடிடி நிறுவனத்திற்காக காட்மேன் என்ற வெப் தொடர் உருவாகி வருகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியான நிலையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றதாக பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

Also Read : ஹீரோக்களை கதறவிட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.. அமுதனாக உலக நாயகனையே பதறடித்த வில்லன்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த வெப் தொடரில் பலான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதுவும் டேனியல் பாலாஜி சில காட்சிகளில் அத்துமீறி நடித்திருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. டேனியல் பாலாஜியுடன் சினிமா வாய்ப்பு இல்லாததால் சோனியா அகர்வால் இந்த வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

ஜாதி மற்றும் மத பிரிவுகளுக்கு இடையே பகையை உண்டாக்கும் படியான காட்சிகள் ஒருபுறம் அமைய பெட்ரூம் சீன்களும் இடம் பெற்று இருக்கிறது. இவ்வாறு அருவருக்கத்தக்க காட்சிகள் சினிமாவில் வெளியிட சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் வெப் தொடரில் எந்த கட்டுப்பாட்டுகளும் இல்லை.

Also Read : செப்டம்பர் 7ஐ குறி வைத்து வெளியாகும் 6 படங்கள்.. 600 கோடி வசூலை தாண்டி ஓடிடிக்கு வந்த ஜெயிலர்

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எந்த எல்லைக்கும் சென்று வருகிறார்கள். சமீபத்தில் கூட தமன்னா நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரிலும் தாராள கவர்ச்சி காட்டி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரில் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஓடிடி தளத்தில் நல்ல படங்கள் வெளியானாலும் இது போன்ற சில மோசமான காட்சிகளுடன் எடுக்கப்பட்டும் படங்களும் வெளியாகி வருகிறது. இது அடுத்த தலைமுறையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு வகையில் வளர்ச்சியும் வீழ்ச்சியாக தான் இருந்து வருகிறது.

Also Read : 25 நாட்கள் தாண்டியும் வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர்.. ஓடிடி ரிலீஸ் நெருங்கினாலும் குறையாத கலெக்ஷன்

- Advertisement -