செப்டம்பர் 7ஐ குறி வைத்து வெளியாகும் 6 படங்கள்.. 600 கோடி வசூலை தாண்டி ஓடிடிக்கு வந்த ஜெயிலர்

September 7 Released Movies: செப்டம்பர் 7 சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் நாளாக தான் அமைய இருக்கிறது. ஏனென்றால் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த படங்கள் இந்த நாளில் வெளியாக இருக்கிறது. அதன்படி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படம் நாளை வெளியாகிறது.

ஜவான் படத்தின் முன்பதிவு செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம். அந்த அளவுக்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியானது.

Also Read : 25 நாட்கள் தாண்டியும் வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர்.. ஓடிடி ரிலீஸ் நெருங்கினாலும் குறையாத கலெக்ஷன்

இந்த படம் வெளியாகி நான்கு வாரங்கள் கடந்த நிலையில் 600 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. இப்போது ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் 7 வெளியாகிறது. மேலும் செப்டம்பர் 8 ஆம் தேதி துடிக்கும் கரங்கள், நூடுல்ஸ் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குங் ஃபூ பாண்டா, தி டிராகன் நைட் சீசன் 3 செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சீசன் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மூன்றாவது சீசன் வர உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

அதேபோல் நெட்பிளிக்ஸில் டாப் பாய் சீசன் 3 வெளியாகிறது. சமீபகாலமாக அதிகம் போதை பொருள் கடத்தல் படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படமும் போதை பொருள் விற்பனையாளர்கள் மற்றும் நேர்மையான அதிகாரிகள் இடையே ஆன மோதலைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதே நாளில் விர்ஜினியா ரிவர் சீசன் 5 வெளியாக இருக்கிறது. இவ்வாறு இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி இரண்டிலுமே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. ஆகையால் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் செம விருந்தாக அமைய இருக்கிறது. ரசிகர்கள் இந்த வார விடுமுறையை படங்களை பார்த்து சிறப்பாக நேரத்தை செலவிடலாம்.

Also Read : பணத்தாசையில் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.. ஜவான் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா என ஷாக்கான அட்லீ?

- Advertisement -