ஹீரோவாக கெத்து காட்ட போட்ட பிளான்.. கடைசியில் அஜித்திடம் சரணடைந்த 2 நடிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளை அதிர வைக்க இருக்கிறது. அதற்கு போட்டியாக வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பதால் தற்போது மீடியாக்களின் கவனம் முழுவதும் இதில் தான் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு அந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக ஸ்டைலிஷ் ஹீரோவான அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார்.

Also read: ட்ரைலரிலேயே மண்ணை கவ்விய வாரிசு.. மீசையை முறுக்கி வரும் அஜித்…

சில வருடங்களுக்கு முன்பு வரை பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்த அரவிந்த்சாமி இப்போதும் அதே சாக்லேட் பாய் இமேஜ் உடன் தான் இருக்கிறார். அந்த வகையில் அவர் இப்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் சந்தானமும் நடிக்க இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

ஏனென்றால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த சந்தானத்திற்கு மக்கள் அந்த அந்தஸ்தை கொடுக்கவில்லை. இதனால் நொந்து போன சந்தானம் நமக்கு காமெடி தான் செட் ஆகும் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

Also read: அஜித் கூடவே ஹீரோவா போட்டி போட்டு.. இப்ப அவருக்கே வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

அவரைப் போன்று வடிவேலுவும் ஹீரோவாக நடித்து கல்லா கட்ட நினைத்தார். ஆனால் அவருடைய அந்த நினைப்பில் மண்ணை வாரி போடும் அளவுக்கு இருந்தது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல். ரொம்ப அலப்பறை கொடுக்கப்பட்டு வெளியான அந்த திரைப்படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு சென்றது.

இதனால் சுதாரித்துக் கொண்ட வடிவேலு இப்போது சில திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதேபோன்று அஜித் நடிக்கும் அடுத்த படமான ஏகே 63ல் இவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்தானம் மற்றும் வடிவேலு இருவருக்கும் அஜித் புது வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

Also read: அடேங்கப்பா! இத்தன கெட்ட வார்த்தையா? இவ்வளோ பீப் சவுண்ட்டா.? மோசமான கெட்டவனாக மாறிய அஜித்

- Advertisement -