திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

கடந்த மாதம் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் வெற்றிமாறனின் கதையும், சூரியின் நடிப்பும் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. அதாவது இந்த மாதிரி ஒரு சீரியஸான கேரக்டரை காமெடி நடிகரான சூரியிடமிருந்து எதிர்பார்க்காத மக்கள் ரொம்பவே வியப்பாக பார்த்து பாராட்டி வருகிறார்கள். அவருடைய நடிப்பே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று சொல்லலாம்.

அத்துடன் விஜய் சேதுபதி கேரக்டரும் இந்த கதைக்கேற்ற மாதிரி மிகவும் கச்சிதமாக பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இப்படி என்னதான் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தாலும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாத மாதிரி சில காட்சிகள் இருப்பதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Also read: இனி நடிச்சா ஹீரோ தான்.. சூரியை தூக்கிவிட துணையாய் நிற்கும் தனுஷின் நெருங்கிய வட்டாரம்

அத்துடன் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடும் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளது. இதனை அடுத்து இப்படத்தை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் விடுதலை படத்தை வெற்றிமாறன் முதலில் ரொம்பவே பெரிதாக எடுத்திருக்கிறார். அதனால் திரையரங்களில் அதிக நேரம் ஆகும் என்பதால் சில காட்சிகளை நீக்கிய பிறகுதான் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து தற்போது விடுதலைப் படம் ஓடிடியில் வெளியிட இருப்பதால் இயக்குனர் வெற்றிமாறன் நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடி இல் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் திரையரங்கு நேரத்தில் இருந்து கூடுதலாக 20 நிமிடம் காட்சிகள் இருக்கும்படி சேர்த்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விடுதலை படத்தை தியேட்டரில் பார்க்காத காட்சிகளை ஓடிடியில் பார்க்கலாம் என்று இந்த மாதிரியான ஏற்பாடு செய்திருக்கிறார்.

Also read: சூரிக்கு போட்டியாக களமிறங்கவுள்ள அடுத்த நடிகர்.. ஹீரோவாக அவதாரம் எடுக்க தயாரான காமெடி நடிகர்

அதனால் ரசிகர்களும் அந்த காட்சிகளை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களை அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் எப்பொழுது வரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த ஏற்பாடு அவர்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுக்கப் போகிறது.

ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகள் பாதி அளவில் எடுத்த நிலையில் தற்போது இப்படத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயக்குனர் இன்னும் சில காட்சிகள் அதிகமாக வைத்து படப்பிடிப்பை எடுக்க இருக்கிறார்கள். அதற்கான வேலைகளை சீக்கிரத்தில் தொடங்கி இந்த வருட இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் விடுதலை பார்ட் 2 பெரிய சம்பவத்தை ஏற்படுத்தும் விதமாக தான் இருக்கும்.

Also read: நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற சினிமா கம்பெனி.. அவமானத்திற்கு பதிலடி கொடுத்த சூரி

Next Story

- Advertisement -