செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

இந்தியளவில் பயத்தின் உச்சத்தை காட்டிய 15 பேய் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க! அப்பவே மிரட்டி விட்ட விஜய் சேதுபதி, மிஸ்கின்

மற்ற படங்களை காட்டிலும் பேய் படங்களை பார்ப்பது என்பது ஒரு வித கிக் தான். நொடிக்கு நொடி பயத்தை காட்டி திகிலின் உச்சத்துக்கு கொண்டு போய் விட்டு விடும். ஒரு நல்ல பேய் படத்தை முழுசாக உட்கார்ந்த பார்த்தால் இரண்டு நாளைக்கு அந்த பயத்தில் இருந்து வெளிவர முடியாது. அப்படிப்பட்ட 15 படங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

தும்பத்: இந்த படம் 2018 ஆம் ஆண்டு ரிலீசான ஹிந்தி படம். தும்பத் என்னும் கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன், ஒரு புதையலை கண்டுபிடிக்கும் பொழுது அங்கே இருக்கும் ஒரு பேயை தூண்டி விடுகிறான். அது தீராத கோபத்தினால் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் பேய் என்பதால் அதற்கு அடுத்து நடக்கும் அசம்பாவிதங்கள் தான் படத்தின் கதை.

ரோமஞ்சம்: மலையாள திகில் படங்களில் முக்கியமாக பார்க்க வேண்டிய படம். நண்பர்கள் சிலர் ஓஜா போர்ட்டினை சரியாக பயன்படுத்தாமல் விட்ட பின் நடக்கும் அமானுஷ்யம் தான் இந்த படத்தின் கதை.

பீட்சா: பேயே இல்லாமல் படம் முழுக்க மிரட்டிய படம் பீட்சா. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரிய திருப்புமுனையை இது ஏற்படுத்தியது. பீட்சா கடையில் வேலை செய்யும் விஜய் சேதுபதிக்கு எதார்த்தமாக வைர கற்கள் கிடைக்க, அதன் பின்னர் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் கதை.

13B: மாதவன் நடித்த இந்த படம் தமிழில் யாவரும் நலம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. புதுசாக ஒரு வீட்டிற்கு குடி வரும் குடும்பத்தினர் பார்க்கும் டிவி சீரியலில் வரும் பேய்கள் அதன் பின்னணி கதை தான் படத்தின் திரைக்கதை.

அவள்: தமிழில் சித்தார்த் மற்றும் ஆன்ட்ரியா நடிப்பில் வெளியான படம் அவள். இந்த படம் இந்தியில் த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற பெயரில் வெளியானது. புதிதாக குடிவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் குடும்பத்தால் சித்தார்த் வீட்டில் நடக்கும் அமானுஷ்யம் தான் இந்த படத்தின் கதை.

பரி: குறிப்பிட்ட கல்ட் இனத்தைச் சேர்ந்த பெண்கள் மனிதர்கள் மூலம் கர்ப்பம் அடைந்து அவர்களுடைய இனத்தை பெருக்குவது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா அந்த கல்ட் இன பெண்ணாக நடித்திருப்பார்.

பயத்தின் உச்சத்தை காட்டிய 15 பேய் படங்கள்

  • ராட் (இந்தி)
  • பூதகாலம் (மலையாளம்)
  • லபச்சப்பி (மராத்தி)
  • ஸ்திரீ (இந்தி)
  • பூட்டர் பாபிஷியாட் (மலையாளம்)
  • கோதனோடி (இந்தி)
  • பூட் (இந்தி)
  • பிசாசு (தமிழ்)
  • 1920 (இந்தி)
- Advertisement -spot_img

Trending News