Entertainment | பொழுதுபோக்கு
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. 175 நாட்கள் ஓடிய ரஜினியின் தரமான 10 படங்கள்
தமிழ்நாட்டில் 175 நாட்கள் வரை ஓடிய சூப்பர் ஸ்டாரின் 10 படங்களின் லிஸ்ட் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் ஸ்டைலுதான் என சொல்லும் அளவுக்கு தனக்கே உரித்தான தனித்துவமான நடிப்பின் மூலம், 72 வயதிலும் டாப் ஹீரோவாக கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்குப் பின் வந்த அஜித், விஜய்க்கு எல்லாம் ரஜினி பயங்கர டஃப் கொடுக்கும் நடிகராகவே இப்போது வரை உள்ளார். ‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்’ என்று கெத்து காட்டும் அளவுக்கு ரஜினியின் தரமான 10 படங்கள் 175 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது.
ராஜாதி ராஜா: 1989 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ராதா, நதியா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். அதிலும் நதியாவுடன் சின்னராசு என்ற கதாபாத்திரத்தில் ரஜினி காமெடியில் அடிதூள் கிளப்பி இருப்பார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 175 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது.
மன்னன்: 1992 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, விஜய் சாந்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் கிருஷ்ணன் என்ற கேரக்டரில் ரஜினி தனக்கே உரித்தான ஸ்டைலில் பிச்சு உதறி இருப்பார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பட்டையை கிளப்பியது.
Also Read: 4-வது படத்திலேயே மார்க்கெட்டை பிடித்த நடிகர்.. மைக்கேல் ஜாக்சன் என பாராட்டப்பட்ட ரஜினியின் நண்பர்
அண்ணாமலை: 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில், ரஜினி நண்பனால் ஏமாற்றப்பட்டு பிறகு அதே நண்பன் முன்பு வளர்ந்து நிற்கும் தொழிலதிபராக மாஸ் காட்டி இருப்பார். இதில் ரஜினி, குஷ்புவின் லூட்டிக்கு அளவில்லாமல் இருக்கும். இதனால் அண்ணாமலை படத்திற்கு திரையரங்குகளில் தாறுமாறான வரவேற்பு கிடைத்தது. படம் 175 நாட்கள் வரை ஓடி மிரட்டியது.
எஜமான்: 1993 ஆம் ஆண்டு ரஜினி, மீனா இணைந்து நடித்த இந்த படத்தை, பக்கா கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக உருவாக்கி இருப்பார்கள். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படமும் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.
பாட்ஷா: மும்பை தாதாவாக இருந்த ஆட்டோக்காரர் மாணிக்கம் என்ற கேரக்டரில் ரஜினி இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருப்பார். இதில் ரஜினியுடன் நக்மா, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று ரஜினி சொன்ன பேமஸ் டயலாக் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் 15 மாதங்கள் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலம்: 1997 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா, மனோரமா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இதில் ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்று ரஜினி சொன்ன பேமஸ் டயலாக் இப்போதும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படமும் திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடி மாபெரும் ஹிட் கொடுத்தது.
Also Read: லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை
இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, முத்து, தளபதி போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் திரையரங்குகளில் தாறுமாறான வரவேற்பு கிடைத்த 100 நாட்களைத் தாண்டியும் 175 நாட்கள் ஓடி திரையுலகையே ஆச்சரியப்படுத்தியது.
