ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இவங்க 10 பேர் ஜென்மத்திற்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை.. எலியும் பூனையுமாக இருக்கும் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் ஈகோ இல்லாமல் எந்த நடிகர்களும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகர்கள் மத்தியில் கடும் போட்டியானது நிலவி வருகிறது. அதிலும் இவர்களுக்குள் நடக்கும் ஈகோ சார்ந்த பிரச்சனைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், மனதிற்குள் அதற்கான தீ பற்றி எரிந்து கொண்ட தான் இருக்கிறது. அப்படியாக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் இனி ஜென்மத்திற்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத 10 ஹீரோக்களை இங்கு காணலாம்.

தனுஷ் – சிம்பு: நடிகர் சிம்பு  சினிமா துறையில் பரபரப்புக்கு பெயர் போனவர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் தன் மனதில் பட்ட எதையும் வெளிப்படையாக பட்டென்று பேசக்கூடியவர். அதிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவர்களுக்கு இடையில் தங்களின் கருத்துக்களை பதிவிடுவதன் மூலம்  பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு தனது படத்தின் வெற்றியின் பொழுது அளித்த பேட்டியில் தனுசை தாக்கி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாகவே இவர்களுக்குள் அடிக்கடி பல்வேறு கருத்து வேறுபாடு மோதல் ஆனது ஏற்பட்டு வருகிறது.

Also Read: ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

ரஜினி – சத்யராஜ்: இவர்கள் இருவரும் தம்பிக்கு எந்த ஊரு, மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பின் பொழுது ரஜினி, மாதவி இடம் சத்யராஜை பற்றி கிண்டலாக பேசியுள்ளார். மேலும் படத்தில் சத்யராஜ் நடித்த சில காட்சிகளை ரஜினி சொல்லி தான் படக்குழு நீக்கி உள்ளது என்று தவறாக புரிந்து கொண்டு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் சத்யராஜ். இப்படியாக கடும் மோதல் காரணமாக இவர்களுக்குள் ஈகோ தொடங்கியது. ஆரம்பத்தில் இவர்களுக்குள் நல்ல நட்பானது இருந்த நிலையில் இடையில் ஏற்பட்ட ஈகோவால் தற்பொழுது வரை எலியும் பூனையும் ஆக இருந்து வருகின்றனர்.

அஜித் – வடிவேலு: நடிகர் அஜித் மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்த திரைப்படம் ராஜா. அப்படியாக இந்த படத்தில் வடிவேலு அஜித்திற்கு மாமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அஜித்தை வாடா போடா என்று அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட இவர் இதேபோன்று வாடா போடா என்றுதான் அஜித்தை அழைத்து வந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதை தவிர்த்து விட்டனர்.

Also Read: அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

விஜய் – நெப்போலியன்: இவர்கள் இருவரும் பிரபுதேவா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதனை அடுத்து போக்கிரி படத்தின் ஷூட்டிங் இன் பொழுது நெப்போலியன், தனது நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது விஜய்யின் உதவியாளர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் நெப்போலியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலை அறிந்த விஜய் தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசி நெப்போலியன் அவர்களை அவமதித்துள்ளார்.  இதன் காரணமாக இவர்கள் தற்பொழுது வரை எந்த ஒரு படங்களிலும் இணைந்து நடித்ததில்லை. 

சந்தானம் – சிவகார்த்திகேயன்: இவர்கள் இருவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கால் பதித்து தற்பொழுது புகழின் உச்சியில் இருந்து வருகின்றனர். சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவரும் காமெடி நிகழ்ச்சியை மையமாக வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்தது இல்லை. அதிலும் தன்னுடன் அறிமுகமான சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் என்ற ஈகோ சந்தானத்திடம் தற்பொழுது வரை இருந்து வருகிறது. அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் இருவரும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் கூட வெளியானது இல்லை என்பதை நிதர்சனமான உண்மை.

Also Read: தோல்வி பயத்தை காட்டும் 2 ஹீரோக்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் !

- Advertisement -

Trending News