ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறுத்தப்படும் முக்கிய சீரியல்.. இது சன் டிவியை தூக்கி சாப்பிட்ட சீரியலாச்சே

சீரியல்களின் தாய் வீடு என்ற பட்டத்துடன் வலம் வந்த சன் டிவி நிறுவனத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் பறித்து வருகின்றனர். இதில் கலர்ஸ் சேனலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னதான் படங்கள் நூறு கோடிகள் வசூல் செய்தாலும் சீரியல்களில் உள்ளது போல் வருமானம் சேனல்களுக்கு கிடையாது. போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகின்றனர்.

சமீபகாலமாக சன் டிவி நிறுவனம் சீரியல்களை தயாரிப்பதில் சொதப்பி வருவதால் ரசிகர்களின் பார்வை ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி பக்கம் சென்று விட்டது. அந்த இரண்டு சேனல்களிலும் சன் டிவியை விட சீரியல்கள் நன்றாக இருக்கிறது என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த யாரடி நீ மோகினி என்ற திகில் கலந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாம். இறுதி கட்டத்தை எட்டியுள்ள அந்த சீரியல் தான் முதல் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட பார்வையாளர்களைப் பெற்ற சீரியல்.

yaaradi-nee-mohini-cinemapettai
yaaradi-nee-mohini-cinemapettai

முதலில் அந்த சீரியலில் தளபதி விஜய்யின் நண்பர் சஞ்சீவ் என்பவர் நடித்து வந்தார். அதன் பிறகு தற்போது தற்போது ஸ்ரீ குமார் என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து சன் டிவி மிரண்டுபோய் சஞ்சீவை அதிக சம்பளம் கொடுத்து கண்மணி என்ற சீரியலில் ஒப்பந்தம் செய்தது என்பதும் கூடுதல் தகவல்.

அப்பேர்பட்ட சீரியல் விரைவில் நிறுத்தப்படுவது ரசிகர்களை மட்டுமல்லாமல் தாய்மார்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரி, எத்தனை நாளைக்குத்தான் உடைந்த வண்டியை ஓட்டு போட்டு ஓட்டுவது என விரைவில் புது சீரியலை களமிறக்க உள்ளார்களாம்.

- Advertisement -