யுவன் இசையில் பாடிய பிரபல நடிகர்.. இவர் ஏற்கனவே பாடி இருக்காரே!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் வழங்கும் தப்பு பண்ணிட்டேன் பாடலின் டீசரை யுவன் தற்போது வெளியிட்டுள்ளார். இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இது வரை யுவன் – சிம்பு காம்போவில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. அதேபோல், இந்த ஆல்பம் சாங்கின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விக்னேஷ் ராமகிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். டாங்கி ஜம்போ இயக்கத்தில் மேகா ஆகாஷ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடலின் டீசரை இசையமைப்பாளர் யுவன் தனது யூடியூப் சேனலில் இன்று வெளியிட்டுள்ளார்.

நான் தப்பு பண்ணிட்டேன் அவளை தொலைச்சேன் என சிம்புவின் குரலில் உருவாகியுள்ள பாடலின் டீசருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இப்பாடல் ஜூலை 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Yuvan-Shankar-Raja
Yuvan-Shankar-Raja

சமீபகாலமாக ஆல்பம்சாங் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் பாடல், பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியான அஸ்கு மாரோ பாடல் ஆகியவற்றை கூறலாம். இந்த வரிசையில் தப்பு பண்ணிட்டேன் பாடலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -